முதல் நாள் முடிவில் 336 ரன்கள் குவித்த இந்திய அணி..!
இன்று இந்தியா மற்றும் இங்கிலாந்திற்கு இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலே ரோஹித் சர்மா 14 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் அடுத்து வந்த சுப்மன் கில் வந்த வேகத்தில் நான்கு பவுண்டரி உட்பட 34 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு ஷ்ரேயாஸ் ஐயர் களமிறங்கினர். இதைத்தொடர்ந்து, களத்தில் இருந்த ஜெய்ஸ்வால் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் நிதானமாக விளையாடி அணியின் ரன்களை உயர்த்தினர். இருப்பினும் ஷ்ரேயாஸ் ஐயர் 27 ரன் எடுத்து நடையை கட்டினார்.
இந்தியா vs இங்கிலாந்து… டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு..!
இதனால் மூன்றாவது விக்கெட்டுக்கு 110 ரன்கள் சேர்க்கப்பட்டது. பின்னர் களம் கண்ட ரஜத் படிதார் 32, அக்சர் படேல் 27, ஸ்ரீகர் பாரத் 17 ரன்கள் அடுத்தடுத்து விக்கெட் இழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் இந்திய அணி தனது முதல் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட்டை இழந்து 336 ரன்கள் எடுத்துள்ளனர். இந்த போட்டியில் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடிய சதம் விளாசி 257 பந்தில் 179* ரன்கள் எடுத்து களத்தில் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இதில் 17 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடங்கும். மறுபுறம் அஸ்வின் 5* ரன்கள் எடுத்து களத்தில் ஆட்டமிழக்காமல் உள்ளார். இங்கிலாந்து அணியில் சோயப் பஷீர், ரெஹான் அகமது தலா 2 விக்கெட்டை பறித்தனர்.