ICC U19 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு!

ஐசிசி U-19 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களை அறிவித்த பிசிசிஐ.
19 வயதிற்குட்பட்டோருக்கான #WorldCup2022 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீஸில் ஜனவரி 14-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில், ஐசிசி U-19 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களை பிசிசிஐ அறிவித்துள்ளது. யாஷ் துல் தலைமையிலான இளம்படையில் தமிழக வீரர் மனோவ் பாரக் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.
இந்திய அணியின் முதல் போட்டி ஜன.15-ம் தேதி தென்னாப் பிரிக்கா அணியை எதிர்கொள்கிறது. 2வது போட்டி ஜன.19-ஆம் தேதியும், 3வது மற்றும் கடைசி போட்டி ஜன.22-ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. முதல் போட்டி கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. கடைசி இரண்டு போட்டிகள் டிரினிடாட் மற்றும் டொபாகோவில் உள்ள பிரையன் லாரா கிரிக்கெட் அகாடமியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐசிசி U-19 உலகக்கோப்பை – இந்திய அணி வீரர்கள்:
யாஷ் துல் (கேப்டன்), ஹர்னூர் சிங், ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி, எஸ்கே ரஷீத் (துணை கேப்டன்), நிஷாந்த் சிந்து, சித்தார்த் யாதவ், அனிஷ்வர் கவுதம், தினேஷ் பனா, ஆராத்யா யாதவ், ராஜ் அங்கத் பாவா, மானவ் பராக், கவுஷல் தம்பே, ஆர்எஸ் ஹங்கர்கேகர், வாசு வாட்ஸ், விக்கி ஓட்ஸ்வால், ரவிக்குமார், கர்வ் சங்வான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
Here’s India’s squad for ICC U19 Cricket World Cup 2022 squad ???? #BoysInBlue
Go well, boys! ???? ???? pic.twitter.com/im3UYBLPXr
— BCCI (@BCCI) December 19, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
ஜெயலலிதாவுடன் உரையாடும் வாய்ப்பை பெற்றிருந்தது என்னுடைய கௌரவம்! பிரதமர் மோடி பதிவு!
February 24, 2025
NZvBAN : தடுமாறிய பங்களாதேஷ்..தூக்கி நிறுத்திய ஜாகிர் அலி! நியூசிலாந்துக்கு வைத்த இலக்கு..
February 24, 2025
தோல்வியை சந்தித்த விடாமுயற்சி…சீக்கிரம் ஓடிடிக்கு வந்த முக்கிய காரணம்?
February 24, 2025
தவெக-வில் இணைகிறாரா காளியம்மாள்? அறிக்கையில் ‘இதை’ கவனித்தீர்களா?
February 24, 2025