#Breaking:கபில்தேவ் சாதனையை முறியடித்த அஸ்வின்!

Default Image

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடைபெற்று வருகிறது. போட்டிக்கு முன்னதாக,டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.அதன்படி இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 129.2 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 574 ரன்கள் எடுத்தது.

இதனைத் தொடர்ந்து,களமிறங்கிய இலங்கை அணி நேற்றைய ஆட்ட முடிவில் 43 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்திருந்தது. போட்டியின் மூன்றாம் நாளான இன்று இலங்கை அணி தொடர்ந்து விளையாடிய நிலையில்,ஆரம்பம் முதலே திணறியது.அதன்படி,
இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்கமுடியாமல் திணறிய நிலையில்,விக்கெட்டுகள் சீட்டுக்கட்டு போல் சரிந்தது.

இறுதியில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் 65 ஓவர்களில் 174 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடிய ஜடேஜா பந்துவீச்சிலும் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி தனது திறமையைக் காட்டினார்.

இதனால்,முதல் இன்னிங்சில் இந்தியாவை இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், 435 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்து கபில்தேவின் சாதனையை முறியடித்துள்ளார்.விட 400 ரன்கள் பின்தங்கிய இலங்கை அணி பாலோ ஆன் ஆனதால், மறுபடியும் தனது இரண்டாம் இன்னிங்சில் விளையாடி வருகிறது.

இந்நிலையில்,இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், 435 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்து கபில்தேவின் சாதனையை முறியடித்துள்ளார்.இன்று மொஹாலியில் நடந்த முதல் டெஸ்டில் இலங்கையின் இரண்டாவது இன்னிங்ஸில் பதும் நிசாங்கவை ஆறு ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தபோது 35 வயதான அஸ்வின் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்களில் முன்னாள் லெக் ஸ்பின்னர் அனில் கும்ப்ளேவ 619 விக்கெட்டுகள் எடுத்து  முன்னிலையில் உள்ளார்.அவருக்கு அடுத்து,கபில்தேவ் 131 போட்டிகளில் 434 விக்கெட்டுகள் எடுத்து இரண்டாவது இடத்தில் இருந்தார்.

இந்நிலையில்,435 விக்கெட்டுக்கள் எடுத்து இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்களில் அஸ்வின் தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளார். ஆஃப் ஸ்பின்னர் அஸ்வின் தனது 85-வது டெஸ்ட் போட்டியில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்