இந்திய தேர்வுகுழுக்கு தக்க படிலடி கொடுத்த ரவிச்சந்திரன் அஸ்வின் !
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினை நடப்பு உலகக்கோப்பை தொடருக்கு இந்திய தேர்வுகுழு தேர்வு செய்யமறுத்தது. இதனால் தற்போது இங்கிலாந்தில் நடக்கும் கவுண்டி தொடரில் ஜேம்ஸ் பேட்டின்சன் பதிலாக நாட்டிங்காம்ஷைர் அணிக்காக ஒப்பந்தமாகி இருந்தார்.
நேற்று கவுண்டி தொடரின் முதல் போட்டியில் நாட்டிங்காம்ஷைர் அணியும் சர்ரே அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சர்ரே அணி முதலில் பேட்டிஙை தேர்வு செய்தது. இதில் சர்ரே அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 240 ரன்கள் குவித்தது. இதன் பின் களமிறங்கிய நாட்டிங்காம்ஷைர் அணி 45 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 107 ரன்கள் குவித்தனர். இதன் பிறகு போட்டி நிறுத்தப்பட்டது.
இந்த போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் 33.2 ஓவரிகளில் 6 விக்கெட்களை பறித்து 69 ரன்கள் மட்டும் கொடுத்திருந்தார். அதுமட்டுமின்றி 9 மெய்டன் ஓவர்களை வீசியுள்ளார். இவரின் சிறப்பாக ஆட்டம் இந்திய தேர்வுக்குழுவுக்கு தக்க பதிலடி கொடுத்தாக இருக்கிறது.