ஐபிஎல் 2018 : 8 அணிகளில் பங்கேற்கும் வீரர்களின் இறுதி பட்டியல் வெளியீடு
11-வது சீசனுக்கான ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடர் ஏப்ரல் 7-ஆம் தேதி துவங்குகிறது. இந்த சீசனில் முன்பு தடை செய்யப்பட்டிருந்த சென்னை,ராஜஸ்தான் உள்ளிட்டு மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்த 8 அணிகளில் பங்கேற்கும் வீரர்களின் இறுதி பட்டியலை ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விவரம்:
எம்.எஸ்.தோனி – விக்கெட் கீப்பர்
சுரேஷ் ரெய்னா – பேட்ஸ்மேன்
ஜடேஜா – ஆல்-ரவுண்டர்
கேதார் ஜாதவ் – பேட்ஸ்மேன்
அம்பாதி ராயுடு – விக்கெட் கீப்பர்
டுவைன் பிராவோ – ஆல்-ரவுண்டர்
ஷேன் வாட்சன் – ஆல்-ரவுண்டர்
முரளி விஜய் – பேட்ஸ்மேன்
சாம் பில்லிங்ஸ் – பேட்ஸ்மேன்
மார்க் வுட் – பவுலர்
ஹர்பஜன் சிங் – பவுலர்
இம்ரான் தாகிர் – பவுலர்
மிட்செல் சாண்ட்னர் – ஆல்-ரவுண்டர் கரண் சர்மா – பவுலர்
லுங்கி நெகிடி – பவுலர்
சர்துல் தாகூர் – பவுலர்
சையத்யா பிஷ்னோய் – ஆல்-ரவுண்டர்
ஜே நாராயன் – விக்கெட் கீப்பர்
தீபக் சஹார் – பவுலர்
கே.எம் ஆசிப் – பவுலர்
கனிஷ்க் சேத் – ஆல்-ரவுண்டர்
துருவ் ஷோரி – ஆல்-ரவுண்டர்
க்ஷிதீஸ் ஷர்மா – ஆல்-ரவுண்டர்
மோனு சிங் – பவுலர்
நாளை மும்பை இந்தியன்ஸ் அணி பட்டியல்
ஐ.பி.எல். போட்டி அட்டவணையில் மாற்றம்:
சண்டிகர் மாநில விமான நிலையத்தில் தற்போது பராமரிப்புப் பணி நடைபெறுவதால், மே 12 ஆம் தேதியில் இருந்து 31 ஆம் தேதி வரை விமான நிலையம் மூடப்படுகிறது.இதனால் மொகாலியில் நடக்கும் சில ஐ.பி.எல். போட்டிகளை மே 12- ஆம் தேதிக்கு முன்னதாகவே நடத்த திட்டமிட்டு, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் போட்டி அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த அட்டவணை மாற்றத்தால் எலிமினேட்டர் மற்றும் 2-வது குவாலிபையர் போட்டிகள் புனே நகருக்கு மாற்றப்பட்டுள்ளன. மே 23 ஆம் தேதி நடைபெறும் எலிமினேட்டர் போட்டியும், மே 25 ஆம் தேதி நடைபெறும் 2-வது குவாலிபையர் போட்டியும் புனேவில் உள்ள எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல். இறுதிப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.