இந்திய அணி , வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரில் இந்திய அணி 3 போட்டியிலும் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
இதை தொடர்ந்து இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் போட்டி துவங்குவதற்கு முன் மழை பெய்ததால் போட்டி 43 ஓவராக குறைக்கப்பட்டு போட்டி தொடங்கப்பட்டது. ஆனால் 13- வது ஓவரில் மழை மீண்டும் குறுக்கிட்டதால் அன்று போட்டி ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று விளையாடியது. இதற்காக இரு அணி வீரர்களும் பயிற்சி எடுத்து வந்தனர். ஆனால் அங்கு மழை பெய்து வந்ததால் வீரர்கள் பயிற்சி எடுக்காத நிலைமை ஏற்பட்டது. இதனால் இந்திய அணி வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் பயிற்சியில் ஈடுபட்டனர்.
அந்த பயிற்சியில் ரிஷப் பண்ட் , சுழல்பந்து வீச்சாளர் குல்திப் யாதவ் ஆகியோர் பயிற்சியில் ஈடுபட்டன. இருவரும் பயிற்சியில் ஈடுபடும் வீடியோவை ரிஷப் பண்ட் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…
பெங்களூர் : புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில் இருக்கும் பெங்களூர் அணியும் இன்று…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், காயம் காரணமாக ஐபிஎல் 2025…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த அளவுக்கு மோசமாக விளையாடமுடியுமோ அந்த அளவுக்கு இந்த சீசனில் விளையாடி வருவதாக…
சென்னை : தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு காலமே உள்ளதால் தற்போதே அரசியல் தேர்தல் களம் பரபரக்க…
சென்னை : கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், கடந்த ஏப்ரல் 5-ம் தேதி பூப்பெய்திய…