ஐசிசி தரவரிசை பட்டியலில் நல்ல முன்னேற்றம் கண்ட இந்திய வீரர்கள் புஜாரா,ரஹானே,விராட் அட்டகாசம்

Default Image

ஐசிசி:பேட்ஸ்மேன்களுக்கான சமீபத்திய ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது இதில் புஜாரா மற்றும் ரஹானே நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர்.

சனிக்கிழமை வெளியிடப்பட்ட பேட்ஸ்மேன்களுக்கான  ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில்  டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மானான புஜாரா மற்றும் துணை கேப்டன் அஜிங்க்யா ரஹானே நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர்.புஜாரா பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாமை பின்னுக்குத்தள்ளி ஆறாம் இடத்திற்கு முன்னேறியும், ரஹானே எட்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

அண்மையில் ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என்று வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது.இதில் வெற்றிக்கு முக்கியப்பங்கு வகித்தவர்களில் புஜாராவும் ஒருவர் 3 அரைசதங்களுடன் 271 ரன்கள் எடுத்தார்- ஆனால் ரன்களை விட, அவர் சந்தித்த பந்துகள் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் அவரது பங்களிப்பை இது காட்டுகிறது.

கேப்டன் விராட் கோலி மற்றும் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் ஆகியோர் நான்காவது மற்றும் முதல் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளனர். இலங்கை டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்காமல் ஓய்விலிருந்து இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் தரவரிசையில் இரண்டு இடங்களைப் பிடித்து பத்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

வில்லியம்சன் (919) தொடர்ந்து பேட்டிங் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் , ஆஸ்திரேலிய ஜோடிகளான ஸ்டீவ் ஸ்மித் (891) மற்றும் மார்னஸ் லாபூசாக்னே (878) ஆகியோர் இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தில் உள்ளனர், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் (823) ஐந்தாவது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.

பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை:

பந்து வீச்சாளர்களில், மூத்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் (760),  ஜஸ்பிரீத் பும்ரா (757) ஆகியோர்  எட்டாவது மற்றும் ஒன்பதாவது இடங்களைத் தக்க வைத்துக் கொண்டனர். பாட் கம்மின்ஸ் (908) தொடர்ந்து தரவரிசையில் முன்னிலை வகிக்கிறார், இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் (839), நியூசிலாந்தின் நீல் வாக்னர் (835) ஆகியோர் இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களில் தொடர்ந்து உள்ளனர்.

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஒரு இடத்தைத் தாண்டி ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். கடந்த வாரம் ஆண்டர்சன் க்ளென் மெக்ராத்தின் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 30 வது ஐந்து விக்கெட்டுகளை  இலங்கைக்கு எதிராக வீழ்த்தியது நல்ல பலனை அளித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்