வெளிநாட்டு டி20 கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்க இந்திய வீரர்களுக்கு தடை என BCCI அறிவிப்பு.
இந்திய வீரர்கள், ஐபிஎஸ் உள்ளிட்ட அனைத்து விதமான கிரிக்கெட்டுகளில் இருந்தும் ஓய்வு பெறுவதற்கு முன்னர் எந்த ஒரு வெளிநாட்டு டி20 கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்கவோ, ஆலோசனை வழங்கவோ கூடாது என பிசிசிஐ தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் தென்னாப்பிரிக்காவில் நடக்க உள்ள டி20 லீக்கில், ஐ.பி.எல். அணிகளின் உரிமையாளர்கள் முதலீடு செய்துள்ளதை அடுத்து BCCI நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) கிரிக்கெட் லிமிடெட், ஐபிஎல்லில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருவதால், தென்னாப்பிரிக்கா டி20 லீக்கில் சிஎஸ்கே நிர்வாகம் வாங்கியுள்ள புதிய அணிக்கு எம்எஸ் தோனியை வழிகாட்டியாக இருக்க பயன்படுத்த முடியாது. இதனால் அனைத்து வகையான விளையாட்டிலிருந்தும் ஓய்வு பெறும் வரை, உள்நாட்டு வீரர்கள் உட்பட எந்த இந்திய வீரரும் வேறு எந்த லீக்கிலும் பங்கேற்க முடியாது என்பது தெளிவாகிறது.
எந்தவொரு வீரரும் இந்த வரவிருக்கும் வெளிநாட்டு லீக்குகளில் பங்கேற்க விரும்பினால், அவர் பிசிசிஐ உடனான அனைத்து உறவுகளையும் துண்டித்தல் மட்டுமே அவ்வாறு செய்ய முடியும் என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தோனி போன்ற ஒரு வீரர் இதுபோன்ற லீக்கில் வழிகாட்டியாக அல்லது பயிற்சியாளராக இருக்க முடியுமா என்று கேட்டதற்கு, பிசிசிஐ அதிகாரி கூறுகையில், “அப்படியானால் அவர் சிஎஸ்கேக்காக ஐபிஎல் விளையாட முடியாது. முதலில் அவர் இங்கு ஓய்வு பெற வேண்டும்” என்றார்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…