தோனிக்கு சிக்கல்..வெளிநாட்டு டி20 கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்க இந்திய வீரர்களுக்கு தடை – BCCI அறிவிப்பு!

Default Image

வெளிநாட்டு டி20 கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்க இந்திய வீரர்களுக்கு தடை என BCCI அறிவிப்பு.

இந்திய வீரர்கள், ஐபிஎஸ் உள்ளிட்ட அனைத்து விதமான கிரிக்கெட்டுகளில் இருந்தும் ஓய்வு பெறுவதற்கு முன்னர் எந்த ஒரு வெளிநாட்டு டி20 கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்கவோ, ஆலோசனை வழங்கவோ கூடாது என பிசிசிஐ தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் தென்னாப்பிரிக்காவில் நடக்க உள்ள டி20 லீக்கில், ஐ.பி.எல். அணிகளின் உரிமையாளர்கள் முதலீடு செய்துள்ளதை அடுத்து BCCI நடவடிக்கை எடுத்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) கிரிக்கெட் லிமிடெட், ஐபிஎல்லில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருவதால், தென்னாப்பிரிக்கா டி20 லீக்கில் சிஎஸ்கே நிர்வாகம் வாங்கியுள்ள புதிய அணிக்கு எம்எஸ் தோனியை வழிகாட்டியாக இருக்க பயன்படுத்த முடியாது. இதனால் அனைத்து வகையான விளையாட்டிலிருந்தும் ஓய்வு பெறும் வரை, உள்நாட்டு வீரர்கள் உட்பட எந்த இந்திய வீரரும் வேறு எந்த லீக்கிலும் பங்கேற்க முடியாது என்பது தெளிவாகிறது.

எந்தவொரு வீரரும் இந்த வரவிருக்கும் வெளிநாட்டு லீக்குகளில் பங்கேற்க விரும்பினால், அவர் பிசிசிஐ உடனான அனைத்து உறவுகளையும் துண்டித்தல் மட்டுமே அவ்வாறு செய்ய முடியும் என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தோனி போன்ற ஒரு வீரர் இதுபோன்ற லீக்கில் வழிகாட்டியாக அல்லது பயிற்சியாளராக இருக்க முடியுமா என்று கேட்டதற்கு, பிசிசிஐ அதிகாரி கூறுகையில், “அப்படியானால் அவர் சிஎஸ்கேக்காக ஐபிஎல் விளையாட முடியாது. முதலில் அவர் இங்கு ஓய்வு பெற வேண்டும்” என்றார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்