இது என்ன புது ட்விஸ்ட்! இங்கிலாந்து அணிக்காக விளையாடிய இந்திய வீரர்!

Harry Singh

சென்னை :  இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆர்.பி.சிங்கின் மகனான ஹாரி சிங் களமிறங்கியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 259 ரன்கள் எடுத்து, 23 ரன்கள் முன்னிலை பெற்று விளையாடி வருகிறது. இதில் இலங்கை அணியின் பேட்டிங்கின் போது, இங்கிலாந்து அணிக்காக ஃபீல்டிங்கில் மாற்று வீரராகக் களத்தில் இந்தியரான ஹாரி சிங் ஓரிரு ஓவர்கள் விளையாடினார்.  இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஆர்.பி.சிங்கின் மகன் தான் இவர்.

ஆர்.பி.சிங் சீனியர்..!

ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மிகச்சிறப்பான பவுலராக திகழ்ந்த ஆர்.பி.சிங் சீனியர், கடந்த 1986-ம் ஆண்டு இந்தியாவுக்காக விளையாடியுள்ளார். மேலும், 1986-ம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 2 ஒருநாள் போட்டியில் ஆர்.பி.சிங் சீனியர் ஆடியுள்ளார். அதே நேரம் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் ஆர்.பி.சிங் அதிகளவில் பங்கேற்றுள்ளார்.

59 சர்வேதச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய அவர் மொத்தமாக 150 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 1980-ம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடத் தொடங்கிய ஆர்.பி.சிங் சீனியர் 1991-ம் ஆண்டு துலீப் டிராபி தொடர் வரை இந்தியாவில் ஆடியுள்ளார். இந்திய அணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு அவர் தனது குடும்பத்துடன் இங்கிலாந்து நாட்டில் குடியேறி விட்டார். அங்கும் அவர் லங்காஷையர் கவுன்டி கிரிக்கெட் கிளப் மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்காக பணியாற்றினார்.

ஹாரி சிங் ..!

தனது தந்தையைப் போலவே கிரிக்கெட்டில் மிக ஆர்வம் கொண்ட ஹாரி சிங் இங்கிலாந்தின் உள்ளூர் கிரிக்கெட் அணியான லங்காஷையர் அணிக்காக 19 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் விளையாடியிருக்கிறார். தந்தை பந்து வீச்சில் சிறப்பானவர் என்றால் இவர் ஒரு நல்ல பேட்ஸ்மேனாக விளையாடி வருகிறார். அதில் சிறப்பாக விளையாடி தனது திறமையை வெளிப்படுத்தியதால் தற்போது இங்கிலாந்து அணியிலும் இடம் பிடித்துள்ளார்.

மேலும், எதிர்காலத்தில் இங்கிலாந்து அணிக்காக இவர் விளையாடுவார் என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். மேலும், பேட்ஸ்மேன் அல்லாமல் ஒரு நல்ல ஆல் ரவுண்டராக வருவதற்கும் அதிக  வாய்ப்புகள் உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் இது வரை லங்காஷையர் அணிக்காக மட்டும் 7 போட்டிகளில் விளையாடி 87 ரன்கள் எடுத்துள்ளார், பவுலிங்கில் 3 போட்டிகளில் பந்து வீசி 2 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்