இது எங்க பாட்டு இல்ல., பாகிஸ்தானில் ஒலித்த ‘ஜன கன மன..,’ குழம்பிய ஆஸி. வீரர்கள்! 

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் பாகிஸ்தான் மைதானத்தில் சாம்பியன்ஸ் டிராபி விளையாட ஆரம்பிக்கும் முன்னர் தவறுதலாக இந்திய தேசிய கீதம் மைதானத்தில் ஒலிபரப்பப்பட்டது.

AUSvENG CT 2025

லாகூர் : 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது. பாகிஸ்தானுக்கு இந்திய கிரிக்கெட் அணியை அனுப்பி பிசிசிஐ மறுத்துவிட்டதால் சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா விளையாடும் போட்டிகள் மற்றும் ஒரு அரையிறுதி போட்டி மட்டும் துபாயில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு விட்டது.

நாளை நடைபெறும் இந்தியா – பாகிஸ்தான் போட்டிகள் கூட துபாய் கிரிக்கெட் மைதானத்தில் தான் நடைபெற உள்ளது. இறுதி போட்டிக்கு இந்தியா முன்னேறினால் இறுதி போட்டியும் துபாயில் தான் நடைபெறும். இப்படியான சூழலில், பாகிஸ்தான் வராத இந்தியாவின் தேசிய கொடி கூட பறக்கவிட கூடாது என பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி நடைபெறும் கிரிக்கெட் மைதானங்களில் இந்திய தேசியகொடியை தவிர மற்ற நாடுகளின் கொடிகள் பறக்கவிடப்படுகின்றன.

இப்படி இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே பனிப்போர் நிலவி வரும் சூழலில், இன்று பாகிஸ்தான் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய தேசிய கீதம் பாடப்பட்ட நிகழ்வு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது இன்று லாகூரில் உள்ள கடாபி கிரிக்கெட்  மைதானத்தில் குரூப் பி-யில் உள்ள இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

போட்டி நடைபெறுவதற்கு முன்னர் இரு நாட்டு வீரர்களும் அணிவகுத்து நிற்பார்கள். அப்போது இருநாட்டின் தேசிய கீதமும் ஒலிக்கப்படும். இதில் முதலில் இங்கிலாந்து அணி தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. அடுத்ததாக ஆஸ்திரேலியா அணி தேசிய கீதம் ஒலிக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில் அங்குள்ள DJ தவறுதலாக இந்தியாவின் தேசிய கீதமான ஜன கன மன கீதத்தை ஒலிபரப்பிவிட்டார்.

ஜன கன மன.., என ஆரம்பித்து பாரத பாக்ய விதாதா என ஒலிபரப்பான போதுதான் சுதாரித்த DJ பாட்டை நிறுத்திவிட்டு ஆஸ்திரேலியா நாட்டின் தேசிய கீதத்தை ஒளிபரப்பப்பட்டது. தேசிய கீதம் தவறுதலாக மாற்றப்பட்டு அதுவும் பாகிஸ்தானுக்கே வராத இந்தயாவின் தேசிய கீதம் ஒலிபரப்பப்பட்ட சம்பவம் மைதானத்தில் சிறிய சலசலப்பை ஏற்படுத்தியது.

இப்போட்டியில் டாஸ்  வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. தற்போது 32 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. பென் டக்கெட் சதம் அடித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்