கிவி பறவையை தெறிக்க விட்ட இந்திய பெண் சிங்கங்கள்!! 2வது ஒருநாள் போட்டியில் வெற்றி!!தொடரை கைப்பற்றியது
நியூசிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வெற்றி.
இந்திய ஆண்கள் அணி 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இந்திய பெண்கள் அணியும் நியூசிலாந்து பெண்கள் அணிக்கு எதிராக 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இன்று 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.இந்த போட்டியிலும் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்றது . வெற்றி இலக்கான 162 ரன்களை 2 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 35.2 ஓவரில் எட்டியது இந்திய மகளிர் அணி.இந்திய அணியில் மந்தனா 90*,கேப்டன் மித்தாலி ராஜ் 63* ரன்களுடன் களத்தில் இருந்து வெற்றி பெற செய்தனர். இதனால் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது .
அதேபோல் இந்திய ஆண்கள் அணியும் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 3 போட்டி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.