ஐதராபாத் கிரிக்கெட் சங்க தலைவராக தேர்வு செய்யப்பட்ட முகமது அசாரூதீன் !
ஐதராபாத் கிரிக்கெட் சங்க தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. இதற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாரூதீன் சங்க தலைவர் பதவிக்கு கடந்த வாரம் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து நடத்தப்பட்ட தேர்தலில் முகமது அசாரூதீன் 147 ஓட்டுகளை பெற்று முதல் இடத்தை பிடித்திருந்தார். இதன்பின் முகமது அசாரூதீன் ஐதராபாத் கிரிக்கெட் சங்க தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.