சாம்பியன்ஸ் டிராபி : இந்திய தேசியக் கொடி இடம்பெறவில்லை? காரணம் இதுவா? 

பாகிஸ்தான் கராச்சி மைதானத்தில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்கும் அணிகளின் நாட்டு கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. இதில் இந்திய தேசிய கொடி மட்டும் பறக்கவிடப்படவில்லை.

Indian flag are not shown in Karachi stadium

கராச்சி : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த வருட போட்டிகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) நடத்துகிறது. பெரும்பாலான போட்டிகள் பாகிஸ்தானில் லாகூர், கராச்சி, ராவல் பிண்டி மைதானத்தில் நடைபெற உள்ளன. இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம், இந்திய வீரர்களின் பாதுகாப்பு கருதி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்த காரணத்தால் இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெற உள்ளன.

இதனால் ஆரம்பம் முதலே இந்திய கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு இடையே பனிப்போர் நிலவி வருகிறது. ஐசிசி கோப்பைகளுக்கான போட்டிகளை நடத்தும் நாட்டின் பெயரை அனைத்து நாட்டு கிரிக்கெட் வீரர்களும் தங்கள் ஜெர்சியில் பதிக்கவேண்டும். ஆனால், சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்தும் பாகிஸ்தான் பெயரை இந்திய கிரிக்கெட் அணி பதிக்கவில்லை என்ற சர்ச்சை எழுந்தது. இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வர மாட்டார்கள், பெயர் பதிக்கமாட்டார்கள் என்று இரு நாட்டு அணிகளுக்கும் இடையே புகைச்சல் அதிகமாகி வருகிறது.

தற்போது அதனை இன்னும் அதிகப்படுத்தும் விதமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில் மேம்படுத்தப்பட்டு வரும் கராச்சி கிரிக்கெட் மைதானத்தில் தற்போது இந்திய நாட்டின் தேசிய கொடி பறக்கவிடப்படவில்லை என்ற செய்தி வெளியாகியுள்ளது. வழக்கமாக போட்டியில் பங்கேற்கும் அனைத்து அணியின் நாட்டு கொடியும் மைதானத்தில் பறக்கவிடப்படும். அவ்வாறு பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டு கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. இந்திய நாட்டின் கொடி மட்டும் அதில் இடம்பெறவில்லை.

இந்த மைதானத்தில் கொடி பறக்கவிடப்படும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி இந்திய ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி உள்ளது. இதுகுறித்து ஐசிசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகி கூறுகையில், பாகிஸ்தானில் விளையாட வரும் நாடுகளின் கொடிகள் மட்டுமே மைதானத்தில் பறக்கவிடப்படுவதாகவும், இந்தியா தங்கள் நாட்டிற்கு வராததால் இந்திய தேசியக் கொடியை ஏற்றவில்லை என்றும் விளக்கமளித்துள்ளார். கராச்சி போலவே லாகூர் மைதானத்திலும் இந்திய நாட்டின் தேசிய கொடி பறக்கவிடப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live - 25032024
PBKSvGT
Manoj Bharathiraja
eps - Annamalai
GT vs PBKS
Avesh Khan
csk ms dhoni and ambati rayudu