இந்தியாவை திணறவைத்த இந்திய வம்சாவளி ; 325 ரன்களுக்கு ஆல்அவுட்..!
இறுதியாக இந்திய அணி 109.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 325 ரன்கள் எடுத்தனர்.
இந்தியா – நியூஸிலாந்து இடையே 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தனர். அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்கள் மயங்க் அகர்வால் மற்றும் சுப்மான் கில் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர்.
இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 80 ரன்கள் சேர்த்தனர். சிறப்பாக விளையாடிய சுப்மான் கில் 44 ரன்னில் வெளியேறினார். பின்னர் களமிறங்கிய புஜாரா மற்றும் விராட் கோலி ஆகியோர் டக் அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தனர். பின்னர், களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் களமிறங்க முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியது போல சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெறும் 18 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.
அடுத்து விருத்திமான் சாஹா களமிறங்க மயங்க் அகர்வால் இருவரும் சிறப்பாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். ஆட்டம் தொடங்கியதில் இருந்து சிறப்பாகவும் நிதானமாகவும் விளையாடி வந்த மயங்க் அகர்வால் சதம் விளாசினார். முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 70 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 221 ரன்கள் சேர்த்தனர். களத்தில் விருத்திமான் சாஹா 25*, மயங்க் அகர்வால் 120* ரன்கள் எடுத்து விளையாடி வந்தனர்.
இதைத்தொடர்ந்து, இன்று 2-ஆம் நாள் ஆட்டத்தை தொடங்கிய சிறிது நேரத்தில் விருத்திமான் சாஹா 27 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்து இறங்கிய ரவிச்சந்திரன் அஸ்வின் டக் அவுட் ஆனார். அடுத்து களம் கண்ட அக்சர் படேல் , மயங்க் அகர்வாலுடன் கூட்டணி அமைத்து சிறப்பாக ரன்களை சேர்த்தனர். இருப்பினும் சிறப்பாக விளையாடிய மயங்க் அகர்வால் 150 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.
அடுத்து களமிறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன் எடுத்து வெளியேற அக்சர் படேல் நிதானமான ஆட்டத்தால் அரைசதம் விளாசி 52 ரன்கள் குவித்தார். இறுதியாக இந்திய அணி 109.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 325 ரன்கள் எடுத்தனர்.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி நியூசிலாந்து வீரர் அஜாஸ் பட்டேல் சாதனை படைத்தார். ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய 3-வது வீரர் என்கிற பெருமையை அஜாஸ் பெற்றார். அஜாஸ் பட்டேல் மும்பையில் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Incredible achievement as Ajaz Patel picks up all 10 wickets in the 1st innings of the 2nd Test.
He becomes the third bowler in the history of Test cricket to achieve this feat.#INDvNZ @Paytm pic.twitter.com/5iOsMVEuWq
— BCCI (@BCCI) December 4, 2021