கொரோனாவிலிருந்து மீண்ட ரிஷப் பந்த்….. அணிக்கு திரும்புவதாக தகவல்…!

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளதாகவும், அணிக்கு திரும்புவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்வதற்காக இங்கிலாந்து சென்ற இந்திய கிரிக்கெட் அணி அப்போட்டியில் தோல்வியைத் தழுவியது.இதனைத் தொடர்ந்து,அங்கு நடைபெறும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.இதன் முதல் டெஸ்ட் போட்டியானது ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி தொடங்குகிறது.
இந்த போட்டிகள் தொடங்க சிறிது காலம் இருப்பதால்,வீரர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டது.இந்த சமயத்தில்,இங்கிலாந்துக்கும் ஜெர்மனிக்கும் இடையிலான யூரோ 2020 போட்டியின் போது லண்டனில் உள்ள வெம்ப்லி ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியைக் காண ரிஷப் பந்த் தனது நண்பர்களுடன் சென்றிருந்தார்.அதுமட்டுமல்லாமல்,மாஸ்க் அணியாமல் ரசிகர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.மேலும்,ரசிகர்களுக்கு செல்பி எடுக்கவும் அனுமதி கொடுத்துள்ளார் என்று சர்ச்சை எழுந்தது.
அதன்பின்னர், இந்திய அணி வீரர் ரிஷப் பந்த்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.இதனால்,அவர் தனிமைப் படுத்தப்பட்டார்.
இதற்கிடையில்,டெஸ்ட் போட்டிகளுக்கு முன்னதாக நடைபெறும் மூன்று நாள் பயிற்சி போட்டியில் கலந்து கொள்ள இந்திய அணி டர்ஹாம் நகருக்குச் சென்றுள்ளது.அதன் முதல் போட்டியானது இன்று நடைபெற்று வருகிறது.இந்த போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா உள்ளார்.
ஆனால்,ரிஷப் பந்த் மற்றும் அணியின் பயிற்சி உதவியாளரும்,பந்து வீச்சாளருமான தயானந்த் கரானி ஆகியோர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதன் காரணமாக டர்ஹாமிற்கு செல்லவில்லை.
இந்நிலையில்,மருத்துவக் கண்காணிப்பில் இருந்த ரிஷப் பந்த்க்கு மீண்டும் சோதனை செய்ததில் கொரோனா நெகடிவ் என வந்துள்ளதாகவும், இதனால் ,டர்ஹாமிற்கு சென்றுள்ள இந்திய அணியுடன் மீண்டும் இணைந்து 28 ஆம் தேதி நடைபெறவுள்ள இரண்டாவது பயிற்சிப் போட்டியில் கலந்து கொள்வார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025