இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப்பந்த்க்கு கொரோனா தொற்று உறுதி…!

Default Image

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப்பந்த்க்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேப்டன் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளது.

அதன்படி,கடந்த மாதம், நியூசிலாந்திற்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த பின்னர்,இந்திய வீரர்கள் 2 வார கால இடைவெளியில் இருந்தனர்.

இதனையடுத்து,5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடவுள்ள நிலையில்,இதன் முதல் டெஸ்ட் போட்டியானது ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி தொடங்குகிறது.

இந்நிலையில்,இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிஷப்பந்த்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .இதனால்,அவர் டெஸ்ட் போட்டிகளுக்கு முன்னர் இந்திய அணி வீரர்களுடன் டர்ஹாமிற்கு பயணம் செய்ய வாய்ப்பில்லை.எனினும்,கொரோனா பாதித்த வீரரின் பெயரை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.

இருப்பினும்,கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ரிஷப்பந்த் விரைவில் குணமடைய வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங் உள்ளிட்டோர் ட்வீட் செய்துள்ளனர்.

இதுகுறித்து,ரெய்னா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:”விரைவில் குணமடையுங்கள் சகோதரர் ரிஷப்பந்த்.நீங்கள் விரைவாக மீள விரும்புகிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.

அவரை தொடர்ந்து,ஹர்பஜன் கூறுகையில்:”விரைவில் நலம் பெறுங்கள் சாம்பியன்”,என்று பதிவிட்டுள்ளார்.

பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா 23 வீரர்களில் ஒருவருக்கு கொரோனா பாசிடிவ் ஏற்பட்டு அவர் தனிமையில் வைக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தினார்.

மேலும்,இதுகுறித்து பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா கூறுகையில்:”ஆம்,ஒரு வீரர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.ஆனால் அவர் கடந்த எட்டு நாட்களாக தனிமையில் இருக்கிறார். அவர் அணியுடன் எந்த ஹோட்டலிலும் தங்கவில்லை, எனவே வேறு எந்த வீரரும் பாதிக்கப்படவில்லை. ஆனால் வீரரின் பெயரை என்னால் வெளியிட முடியாது”,என்று தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்