இந்திய கிரிக்கெட் அணி வீரர் மயங்க் அகர்வால் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திரிபுரா மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்திய கிரிக்கெட் சர்வதேச அணிக்காக 21 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள மயங்க் அகர்வால் ரஞ்சி கோப்பை தொடரில் கர்நாடக அணியின் கேப்டனாக உள்ளார்.
இந்த நிலையில் மயங்க் அகர்வால், திரிபுரா மாநிலத்தின் அகர்டலாவில் இருந்து சூரத் செல்ல விமானம் ஏறினார். அப்போது அவருக்கு திடீரென தொண்டை மற்றும் வாயில் கடுமையான எரிச்சல் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அகர்டலாவில் உள்ள தனியார் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இருப்பினும், மயங்க் அகர்வாலின் உடல்நலப் பிரச்சினையின் தன்மை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இது தொடர்பான முழு தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையில் மயங்க் அகர்வால் விரைவில் குணமடைந்து பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…