மாட்டிறைச்சி & பன்றிக்கறிக்கு தடை.!? இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு புதிய உணவு கட்டுப்பாடுகள்.!?
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் இனி மாட்டிறைச்சி மற்றும் பன்றி கறி ஆகியவற்றை உன்ன கூடாதாம். ஹலால் செய்யப்பட்ட உணவுகளை மட்டுமே உண்ண வேண்டுமாம். இந்த தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணி, கடைசியாக துபாயில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் தகுதிச்சுற்றுடன் வெளியேறியது. அரையிறுதி வாய்ப்புக்கு கூட தகுதி பெறாமல் இந்திய அணி வெளியேறியது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது.
அதன் பின்னர், தற்போது, அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற நியூசிலாந்து கிரிக்கெட் அணியுடனான டி20 தொடரை 3-0 என்கிற கணக்கில் வென்றது.
தற்போது இணையத்தில் வெளியான தகவலின்படி, இந்திய கிரிக்கெட் அணி அடுத்தடுத்து வரவுள்ள ஐசிசி தொடர்களில் சிறப்பாக விளையாட இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு புதிய உணவு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாம்.
அதன்படி, இனி இந்திய அணி வீரர்கள் மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சி ஆகியவற்றை சாப்பிட கூடாதாம். அதற்கு பதிலாக ஹலால் செய்யப்பட்ட (இறைச்சிக்கென பயன்படுத்தப்படும் உயிரினங்கள்) இறைச்சிகளை மட்டுமே உண்ண வேண்டும் என கூறப்பட்டுள்ளதாம். இதன் மூலம், நல்ல சத்துக்கள் கிடைக்கும், வீரர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் என கூறப்பட்டுள்ளதாம். இது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை.