முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவு : இந்திய கிரிக்கெட் வீரர்களின் ‘கருப்பு பேட்ஜ்’ அஞ்சலி!

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவுக்கு வருத்தம் தெரிவிக்கும் விதமாக இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் கையில் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடி வருகின்றனர்.

Indian cricket team players in IND vs AUS

மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது டெஸ்ட் போட்டி (பாக்சிங் டே டெஸ்ட்) மெல்போர்ன் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நேற்று இரவு முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவால் உயிரிழந்தார். அவருக்கு, அஞ்சலி செலுத்தும் விதமாக, இன்று மெல்போர்ன் மைதானத்தில் 2ஆம் நாள் ஆட்டத்தில் களமிறங்கும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் கையில், மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடி வருகின்றனர்.

2ஆம் நாள் ஆட்டத்தில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட் இழப்புக்கு 474 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 140 ரன்கள் எடுத்தார். இந்திய அணி சார்பாக பும்ரா 4 விக்கெட்டுகளையும், ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், ஆகாஷ் தீப் 2 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் களமிறங்கி கேப்டன் ரோஹித் சர்மா இந்த முறையும் 3 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை அளித்தார். ஜெய்ஸ்வால் 18 ரன்களுடம், கே.எல்.ராகுல் 13 ரன்களுடனும் களத்தில் விளையாடி வருகின்றனர். இந்திய அணி 9.4 ஓவர்களில் 35 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்