டி20, ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க விமானம் மூலம் இலங்கை புறப்பட்டுச் சென்றது இந்திய கிரிக்கெட் அணி.
இந்திய கிரிக்கெட் வருகின்ற ஜூலை 13- ஆம் தேதி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 கொண்ட கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடரில் பங்கேற்க விமானம் மூலம் இலங்கைக்கு ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி புறப்பட்டுச் சென்றது. இந்த தொடரில் இந்திய அணியை வீரர் ஷிகர் தவான் வழிநடத்த உள்ளார். அணியில் ஹர்திக் பாண்ட்யா, சஞ்சு சாம்சன், இஷன் கிஷன், குல்தீப் யாதவ், தேவ்தத் படிக்கல், யுஸ்வேந்திர சாகல், உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
இது குறித்து கேப்டன் ஷிகர் தவான் கூறுகையில், இந்திய அணியின் கேப்டனாக அணியை நான் வழிநடத்த கிடைத்திருக்கும் வாய்ப்பு மிக பெரிய கவுரவம். இந்த தொடருக்காக நங்கள் சிறப்பாக தயாராகி வருகிறோம். சிறந்த பயிற்சியாளரான ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் இந்திய அணிக்காக நான் வங்கதேச தொடரில் கேப்டனாக விளையாடி உள்ளேன். இந்த தொடரில் அவர் எங்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளது மிகவும் சிறப்பானது விஷயம். ஒரு அணியாக நாங்கள் இணைந்து நிச்சயம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்.” என்று தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக…
சென்னை : மயிலாடுதுறையில் தரங்கம்பாடி , பொன்னேரி, செங்குன்றம் ஆகிய பகுதிகளிலும், சென்னையில் மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று முதல்…