அவரால் மட்டும் தான் அது முடியும்! ரிஷப் பண்ட் குறித்து ரோஹித் சர்மா!

rohit sharma about rishabh pant
Rohit Sharma : இந்திய கிரிக்கெட் கேப்டன் ரோஹித் சர்மா ரிஷப் பண்ட்டை பற்றி பாராட்டி பேசியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தற்போது ஐபிஎல் போட்டியில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். இதற்கிடையில், சமீபத்தில் கிளப் ப்ரேரி ஃபயர் என்ற யூடியூப்
சேனலுக்கு பேட்டி அளிக்கும் போது இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் தான் தன்னை சிரிக்க வைக்கும் நல்ல வீரர் என்று புகழ்ந்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய ரோஹித் சர்மா ” எனக்கு ரிஷப் பண்ட்டை ரொம்பவே பிடிக்கும். அவர் செய்யும் விஷயங்கள் எனக்கு சிரிப்பை ஏற்படுத்தும்.

ரிஷப் பண்ட்டை நான் சிறிய வயதில் இருந்தே பார்த்துக்கொண்டு இருக்கிறேன். போட்டி நடந்து கொண்டு இருக்கும்போது அவர் ஸ்டம்புகளுக்குப் பின்னாடி இருந்து செய்யும் விஷயங்கள் எல்லாம் எனக்கு சிரிப்பாக இருக்கும். அவருக்கு விபத்து ஏற்பட்டு கிரிக்கெட் விளையாடாமல் இருந்தது எனக்கு ஏமாற்றமாகவும் வருத்தமாகவும் இருந்தது. அவர் திரும்ப எப்போது விளையாடுவார் என ஆவலுடன் காத்து இருந்தேன்.

தற்போது அவர் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருவதை பார்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் அப்போதில் இருந்து இப்போது வரை எனக்கு பிடித்த காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறார். அவர் காயத்தில் இருந்தபோது அவர் என்னை சிரிக்க வைத்த சம்பவங்கள் தான் நினைவுக்கு வந்தது. என்னை சிரிக்க வைப்பதில் அவர் தான் சிறந்தவர்.

உண்மையில் சொல்லவேண்டும் என்றால் நான் சிரிக்கவேண்டும் என்றால் போட்டிகளில் விளையாடி கொண்டு இருக்கும் போதோ அல்லது உணவு இடைவெளிகளில் போதோ அவருடைய பக்கத்தில் இருந்தாலே போதும். என்னை மட்டும் இல்லை அவருடன் இருக்கும் அனைவரையுமே எதாவது சொல்லிக்கொண்டு சிரிக்க வைத்துவிடுவார். என்னை சிரிக்க வைக்க அவரால் மட்டும் தான் முடியும் ” எனவும் ரோஹித் சர்மா கூறியுள்ளார். மேலும், ரிஷப் பண்ட் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணிக்காக கேப்டனாக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்