ஆஸ்திரேலிய அணி கேப்டன் பிஞ்ச் கொடுத்த கேட்சை இந்திய அணி கேப்டன் விராட் கோலி தவறவிட்டார்.
இந்திய அணி கேப்டன் கோலி தலைமையில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.இதில் இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி இன்று பிரிஸ்பேனில் நடக்கிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இந்திய அணி வீரர்கள் விவரம்: ரோகித் சர்மா, தவான், லோகேஷ் ராகுல், விராட் கோலி(கேப்டன்), ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக், குருணால் பாண்டியா, குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார், பும்ரா, கலீல் அகமது ஆகியோர் இடம்பிடித்தனர்.
இதையடுத்து ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தொடங்கியது.ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் பிஞ்ச் மற்றும் ஷார்ட் இறங்கினார்கள்.போட்டியில் 3 ஓவரை பூம்ரா வீசினார்.அதில் முதல் பந்தை பிஞ்ச் எதிர்கொண்டார்.அப்போது அவர் ஷார்ட் கவர் திசையில் நிண்ட இந்திய அணி கேப்டன் விராட் கோலியை நோக்கி அடித்தார்.விராட் கோலியோ அந்த கேட்சை தவறவிட்டார்.இதனால் பிஞ்ச் மறு வாழ்வு பெற்று விளையாடி வருகிறார்.தற்போது வரை ஆஸ்திரேலிய அணி6 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட்டை இழந்து 38 ரன்கள் அடித்துள்ளது.களத்தில் பிஞ்ச் 25*, லின் 6* ரன்களுடன் உள்ளனர்.இந்திய அணியின் பந்து வீச்சில் கலீல் அகமது 1 விக்கெட் எடுத்துள்ளார்.
சென்னை : இராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அமரன் திரைப்படம் தீபாவளி…
டெல்லி : 13 மாநிலங்களில் 48 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை இடைத்தேர்தல் முன்னிலை குறித்த நிலவரம் வெளியாகி…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் [நவம்பர் 23] இன்றைக்கான எபிசோடில் ரோகினியை மலேசியாவிற்கு டிக்கெட் போட சொல்லும் விஜயா. .அதிர்ச்சியில் …
தஞ்சை : மாவட்டத்தில் அ.தி.மு.கவின் கள ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணியும், திண்டுக்கல்…
மும்பை : மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டு முன்னணி நிலவரங்கள் வெளியாகி வருகின்றன. இதில் காலை முதலே…
ராஞ்சி : ஜார்கண்டில் மொத்தமாக உள்ள 81 தொகுதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. அதன்படி, முதல் கட்டமாக கடந்த…