இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் அக்சர் படேல் தனது காதலி மேஹா பட்டேலை மணந்தார்!

Default Image

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் அக்சர் படேல், தனது காதலியும் உணவியல் நிபுணரான மேஹா படேலை வியாழக்கிழமை (ஜனவரி 26) பாரம்பரிய முறையில் குஜராத்தின் வதோதராவில் திருமணம் செய்து கொண்டார்.

29 வயதான இந்திய ஆஃப் ஸ்பின்னர் அக்சர் படேல் அக்சர் தனது திருமணத்தின் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகினார்.ஆனால்,இந்த மாத தொடக்கத்தில் சமீபத்திய இலங்கை தொடரில் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார் அக்சர்.

அக்சரும் மேஹாவும் நீண்ட நாட்களாக ஒருவரையொருவர் காதலித்து வந்த நிலையில் கடந்த வருடம் ஜனவரியில் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.புதன்கிழமை அன்று மெஹந்தி விழாவை தொடர்ந்து நேற்று திருமணம் நடைபெற்றது. அவரது திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டும் கலந்துகொண்டனர்.

அக்சரின் மனைவி மேஹா உணவியல் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் ஆவார். மேஹா சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக தனது அன்றாட வாழ்க்கையின் தருணங்களை தவறாமல் பகிரக்கூடியவர்.
திருமண நிகழ்வின் புகைப்படங்களை தனது சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார் மேஹா.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கே.எல்.ராகுலுக்கும் நடிகையும் நட்சத்திரக் குழந்தையுமான அதியா ஷெட்டிக்கும் கடந்த ஜனவரி 23-ம் தேதி கண்டாலாவில் உள்ள அத்தியாவின் தந்தை சுனில் ஷெட்டியின் பண்ணை வீட்டில் திருமணம் நடைபெற்றது.

கே.எல்.ராகுலை தொடர்ந்து இரண்டாவது இந்திய வீரர் அக்சர் படேலும் திருமணம் செய்து கொண்டுள்ளார் அவரது திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்