2016-க்குப் பிறகு டி20 தொடரில் மோதும் இந்தியா- ஜிம்பாப்வே..!

india team

ஜூன் மாதம் டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு  ஜூலை மாதம் இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்யவுள்ளது. ஜிம்பாப்வே கிரிக்கெட் மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) நேற்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்தன. சுற்றுப்பயணத்தின் போது, ​​இந்திய அணி ஜிம்பாப்வேக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.

இந்த டி20 போட்டிகள் ஜூலை 6 முதல் 14 வரை நடைபெறும் என்றும் அனைத்து போட்டிகளும் ஹராரேயில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி கடைசியாக 2022 இல் ஜிம்பாப்வேவிற்கு சுற்றுப்பயணம் செய்தது. 2022 இல் ஜிம்பாப்வே சென்ற இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை 3-0 என கைப்பற்றியது.

U19 Semi-Final1: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்த இந்திய அணி

கடைசியாக 2016-ல் ஜிம்பாப்வேக்கு எதிராக டி20 தொடரில் இந்தியா விளையாடியது. இந்த டி20 தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதற்கிடையில் இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கு ஜிம்பாப்வே தகுதி பெறவில்லை. இந்த ஆண்டு நமீபியா, உகாண்டா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் ஆப்பிரிக்காவில் இருந்து விளையாடுகின்றன. 2023-ல் ஒருநாள் உலகக் கோப்பையை கூட விளையாட முடியவில்லை.

ஜிம்பாப்வே அணி கடைசியாக 2022 டி20 உலகக்கோப்பையில் விளையாடியது, அதில் லீக் கட்டத்திலேயே வெளியேற்றப்பட்டது. முன்னதாக, ஐசிசி தடை காரணமாக அந்த அணியால் 2021 உலகக்கோப்பையில் விளையாட முடியவில்லை. இது மட்டுமின்றி, ஜிம்பாப்வே அணி 2019 ஒருநாள் உலகக் கோப்பைக்கு கூட தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்