#Big Breaking: ஆசியக் கோப்பை டி20 சாம்பியன் பட்டத்தை வென்றது இந்திய மகளிர் அணி
இலங்கையுடனான இறுதிப் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்தியா.
மகளிர் ஆசியக்கோப்பை டி20 தொடரின் இறுதிப்போட்டியில், இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதியது. வங்கதேசத்தின் சீல்ஹெட் மைதானத்தில் இந்த இறுதி போட்டி நடைபெற்றது. இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு இலங்கை மகளிர் அணி 65 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது. 66 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.
இதனைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி இந்தியா 8.3 ஓவரில் இலக்கை எட்டியது, 2 விக்கெட்கள் இழப்பிற்கு 71 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி ஆசிய கோப்பையை வென்றது இந்திய மகளிர் அணி.ஸ்மிருதி மந்தனா 51 ரன்கள் எடுத்து கடைசிவரை அட்டமிழக்காமல் இருந்தார்.
இதன் மூலம் இந்திய அணி 7 வது முறையாக மகளீர் ஆசிய கோப்பையை கைப்பற்றியுள்ளது.இந்தியாவின் ஏழு மகளிர் ஆசியக் கோப்பை வெற்றிகளில் நான்கு ODI வடிவத்தில் மற்றும் மூன்று T20I வடிவத்தில் அடங்கும்.