பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் : இந்தியா பேட்டிங்.. கேப்டன் ரோஹித்திற்கு அணியில் இடமில்லை! 

பார்டர் கவாஸ்கர் தொடரில் 5வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. ரோஹித் சர்மா அணியில் இடம்பெறவில்லை.

Rohit sharma - Jaiswal - KL Rahul

சிட்னி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை 4 டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ள அதில் 2-ல் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது. பும்ப்ரா தலைமையில் இந்தியா விளையாடிய முதல் போட்டியில் மட்டுமே இந்தியா வெற்றி பெற்றது. ஒரு 3வது போட்டியை போராடி சமன் செய்தது இந்தியா.

ரோஹித் சர்மா தலைமையில் இந்தியா களமிறங்கிய 3 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி பெரிய அளவில் சோபிக்கவில்லை. அணியில் நல்ல பேட்ஸ்மேனாகவும் ரோஹித் பெரிய அளவில் தனது ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. விராட் கோலியும் கூட பெரிய அளவில் விளையாடவில்லை.

இப்படியான சூழலில் 5 வது டெஸ்ட் போட்டியில் கண்டிபாக பெரிய அளவில் மாற்றம் இருக்கும் என கூறப்பட்டது. அதற்கேற்றார்போல, தற்போது மிக பெரிய மாற்றமாக அணி கேப்டனையே பிசிசிஐ வெளியில் உட்கார வைத்துள்ளது.  5வது டெஸ்ட் போட்டியில் முதல் போட்டியை வெற்றியுடன் வழிநடத்திய பும்ப்ரா வழிநடத்துவார் என்றும் ரோஹித்திற்கு பதில் சுப்மன் கில் களமிறங்குவார் என்றும், ஆகாஷ் தீப்பிற்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா களமிறங்குவார் என்றும் மாற்றங்கள் செய்யப்பட்டள்ளது.

சிட்னி மைதானத்தில் தொடங்கிய 5வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல்.ராகுல் களமிறங்கினர்.  இருவருமே அடுத்தடுத்து முறையே 10 மற்றும் 4 ரன்கள் மட்டுமே எடுத்து தங்கள் விக்கெட்டை இழந்தனர்.  சுப்மன் கில் மற்றும் விராட் கோலி ஆகியோர் முறையே 20 மற்றும் 12 ரன்கள் எடுத்து விளையாடி வருகின்றனர். 25 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது இந்திய அணி.

இந்தியா – ஆஸ்திரேலியா அணி வீரர்கள் :

இந்திய அணியில், கேப்டன் பும்ரா, ஜெய்ஷ்வால்,  விராட் கோலி, சுப்மன் கில், கே.எல்.ராகுல், ரிஷப் பன்ட் , முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, நிதிஷ்குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம் பெற்றுள்ளார். ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் பேட் கம்மின்ஸ், சாம் கான்ஸ்டாஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், பியூ வெப்ஸ்டர், அலெக்ஸ் கேரி , மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஸ்காட் போலண்ட் ஆகியோர் இடம் பெற்றுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்