#INDvsNZ: 2-வது டெஸ்ட் போட்டி – டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு!
நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது(கடைசி) டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இந்தியா -நியூசிலாந்து ஆகிய இரு அணிகள் இடையே 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. அதன்படி,முதலில் நடைபெற்ற 20 ஓவர் தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்து தொடரை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து,2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் கான்பூரில் நடந்த முதல் டெஸ்ட் டிரா ஆனது.
இந்த நிலையில்,இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையே 2-வது(கடைசி) டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்க இருந்த நிலையில்,மோசமான மைதானம் காரணமாக டாஸ் தற்போது நடக்காது என்றும், காலை 10:30 மணிக்கு மீண்டும் மைதான ஆய்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.அதன்பின்னர்,12 மணிக்கு போட்டி தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில்,போட்டிக்கு முன்னதாக டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.20 ஓவர் தொடர் மற்றும் முதல் டெஸ்டுக்கு ஓய்வு கொடுக்கப்பட்ட கேப்டன் விராட் கோலி இன்றைய டெஸ்டில் போட்டியில் விளையாடுகிறார்.மேலும்,காயம் காரணமாக 2-வது டெஸ்டில் இருந்து இஷாந்த் சர்மா,அஜிங்க்யா ரஹானே, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் வெளியேறியுள்ளனர்.
அணிகள்:
இந்தியா (பிளேயிங் லெவன்): மயங்க் அகர்வால், ஷுப்மான் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி (c), ஷ்ரேயாஸ் ஐயர், விருத்திமான் சாஹா (w), ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், ஜெயந்த் யாதவ், உமேஷ் யாதவ், முகமது சிராஜ்.
நியூசிலாந்து (பிளேயிங் லெவன்): டாம் லாதம் (c), வில் யங், டேரில் மிட்செல், ராஸ் டெய்லர், ஹென்றி நிக்கோல்ஸ், டாம் ப்ளூன்டெல் (w), ரச்சின் ரவீந்திரா, கைல் ஜேமிசன், டிம் சவுத்தி, வில்லியம் சோமர்வில்லே, அஜாஸ் படேல்.
Captain @imVkohli wins the toss and #TeamIndia will bat first at the Wankhede.
Live – https://t.co/KYV5Z1jAEM #INDvNZ @Paytm pic.twitter.com/GTffaDWNPY
— BCCI (@BCCI) December 3, 2021