தொடரை கைப்பற்றுமா இந்தியா? டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!

இரண்டாம் டி-20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோலி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, மூன்று ஒருநாள், மூன்று டி-20 மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி கைப்பற்றியதை தொடர்ந்து, முதல் டி-20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது.
இந்தநிலையில், இன்று நடைபெற்று வரும் இரண்டாம் டி-20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா அணியில் ஆரோன் பின்ச் வெளியேறினார். அவருக்கு பதில் மத்தேயு வேட் கேப்டனாக ஆஸ்திரேலியா அணியை வகித்து வருகிறார்.
விளையாடும் வீரர்களின் விபரம்:
இந்தியா:
கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், ஹார்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், தீபக் சஹார், டி நடராஜன், யுஸ்வேந்திர சாஹல்.
ஆஸ்திரேலியா:
டி ஆர்சி ஷார்ட், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஸ்டீவன் ஸ்மித், க்ளென் மேக்ஸ்வெல், மொய்சஸ் ஹென்ரிக்ஸ், மத்தேயு வேட் (விக்கெட் கீப்பர், கேப்டன்), டேனியல் சாம்ஸ், சீன் அபோட், மிட்செல் ஸ்வெப்சன், ஆடம் ஜாம்பா, ஆண்ட்ரூ டை.
லேட்டஸ்ட் செய்திகள்
“கேப்டனாக இருக்க பட்லரின் நேரம் முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன்” – முன்னாள் இங்கிலாந்து கேப்டன்கள்.!
February 27, 2025
“2 நாட்களுக்கு முன் சமாதான தூது விட்டார் சீமான்” – நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட பரபரப்பு வீடியோ!
February 27, 2025
பாடகர் யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதியா? விளக்கம் அளித்த மகன்!
February 27, 2025
சீமான் வீட்டு களோபரம் : “நாட்டை பாதுகாத்தவருக்கு இந்த நிலைமையா?” அமல்ராஜ் மனைவி வேதனை!
February 27, 2025
“என்னைய சமாளிக்க முடியல., அந்த பொம்பளைய கூப்டு வராங்க..” சீமான் ஆவேசம்!
February 27, 2025