2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் கடைசி லீக் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்திய அணி ஏற்கனவே அரையிறுதிக்குள் நுழைந்து முதலிடத்தில் உள்ளது. நெதர்லாந்து அணி அரையிறுதிக்குள் வருவதற்கான தகுதியை இழந்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில உள்ளது. இன்று இந்தியா – நெதர்லாந்து அணி தங்களின் கடைசி லீக் போட்டியை பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் விளையாடுகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. இந்திய அணியில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் அதே அணியுடன் இந்தியா களமிறங்குகிறது.
இந்திய அணி வீரர்கள்:
ரோஹித் சர்மா(கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல்(விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
நெதர்லாந்து அணி வீரர்கள்:
வெஸ்லி பாரேசி, மேக்ஸ் ஓ அவுட் , கொலின் அக்கர்மேன், சைப்ராண்ட் ஏங்கல்பிரெக்ட், ஸ்காட் எட்வர்ட்ஸ்(கேப்டன்/விக்கெட் கீப்பர்), பாஸ் டி லீட், தேஜா நிடமானுரு, லோகன் வான் பீக், ரோலோஃப் வான் டெர் மெர்வே, ஆர்யன் தட், பால் வான் மீகெரென் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் சேஸிங் செய்வதில் தான் சொதப்பியது என்று பார்த்தால் இன்று…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், இபிஎஸ்,…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. சென்னை…
சென்னை : பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையை அடுத்து புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற…