#BREAKING : ஒயிட் வாஸ் செய்து தொடரை கைப்பற்றிய இந்தியா..!
பெங்களூருவில் இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைப்பெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் நாளில் 252 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் ஆட்டமிழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் 92 ரன்கள் எடுத்தார். இலங்கை அணியில் லசித் அம்புல்தெனிய, பிரவீன் ஜெயவிக்ரம தலா 3 , தனஞ்சய டி சில்வா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து, தனது முதல் இன்னிங்சிஸை தொடங்கிய இலங்கை அணி 109 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் 2-வது இன்னிங்சில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 303 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. இதன் காரணமாக இலங்கை அணிக்கு 447 ரன்கள் என்ற வெற்றி இலக்கை இந்தியா நிர்ணயம் செய்தது.
447 ரன்கள் இலக்குடன் நேற்று 2-வது இன்னிங்க்ஸை தொடங்கிய இலங்கை அணி நேற்றைய 2-ஆம் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழந்து 28 ரன்கள் எடுத்தனர். இலங்கை தரப்பில் குசல் மெண்டிஸ் (16*), திமுத் கருணாரத்னா (10*) ஆகியோர் களத்தில் இருந்தனர். இதைத்தொடர்ந்து, இன்று 3-ஆம் நாள் ஆட்டம் தொடங்கியது. சிறப்பாக குசல் மெண்டிஸ் , திமுத் கருணாரத்னா இருவரும் விளையாட நிதானமாக விளையாடி வந்த திமுத் கருணாரத்னா அரைசதம் அடித்து 54 ரன்னில் பண்ட் ஸ்டாம் அவுட் செய்தார்.
மற்றோரு வீரர் திமுத் கருணாரத்னா சிறப்பாக விலையாடி சதம் விளாசி 107 ரன்னில் பும்ராவிடம் போல்ட் ஆனார். அதில் 15 பவுண்டரி அடங்கும். பின்னர் இறங்கிய அனைத்து வீரர்களும் வந்த வேகத்தில் சொற்ப ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். இறுதியாக இலங்கை அணி 59.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 208 ரன்கள் எடுத்து 238 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
முதல் இன்னிங்சில் 5, 2-வது இன்னிங்சில் 3 என மொத்தம் இந்தப் போட்டியில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி பும்ரா அசத்தினார். 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் போட்டியை இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.