இங்கிலாந்து அணி 8 விக்கெட்டை இழந்து 188 ரன்கள் எடுத்து 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகளை கொண்ட டி-20 தொடர் நடைபெற்றது. இன்று கடைசி டி-20 போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித், விராட் களமிறங்கினர்.
தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக அடி வர, ரோஹித் சர்மா 30 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார். பின்னர், 64 ரன்கள் எடுத்து ரோஹித் வெளியேற, இதைத்தொடர்ந்து, இறங்கிய சூரியகுமார் யாதவ் 17 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.
அடுத்து இறங்கிய ஹர்திக் பாண்டியா ,கோலி இருவரும் சேர்ந்து அதிரடியாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார். இறுதியாக இந்திய அணி 20 ஓவர் முடிவில் 224 ரன்கள் குவித்தனர். கடைசிவரை களத்தில் விராட் கோலி 80* , ஹர்திக் பாண்டியா 39* ரன்களுடன் நின்றனர்.
225 ரன்கள் இலடக்குடன் இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்களாக ஜேசன் ராய்,
ஜோஸ் பட்லர் இறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே ரன் எடுக்காமல் ஜேசன் ராய் வெளியேற பின்னர், டேவிட் மாலன் களமிறங்கினர். ஜோஸ் பட்லர், டேவிட் மாலன் இருவரும் கூட்டணி வைத்து அணியின் எண்ணிகையை உயர்த்தினர். அதிரடியாக விளையாடிய இருவரும் அரைசதம் விளாசினர்.
இதையெடுத்து ஜோஸ் பட்லர் அரைசதம் அடித்த சில நிமிடங்களில் விக்கெட்டை இழந்தார். இவர்களின் கூட்டணியில் 130 ரன்கள் எடுத்தனர். அடுத்த 10 ரன்னில் டேவிட் மாலன் 68 ரன்கள் எடுத்து பெவிலியன் திருப்பினார். அடுத்து இறங்கிய ஜானி பேர்ஸ்டோவ் 7 , மோர்கன் 1 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தனர்.
இறுதியாக இங்கிலாந்து அணி 8 விக்கெட்டை இழந்து 188 ரன்கள் எடுத்து 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்திய அணி 3-2 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. டெஸ்ட் தொடரையும் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
சவுதி : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு என்பது இருந்து வந்தது. இந்த நிலையில்,…
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : தெலுங்கர்கள் அந்தப்புரத்து சேவகர்கள் என்ற நடிகை கஸ்தூரியின் சர்ச்சைப் பேச்சு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…
நாகப்பட்டினம் : நாகை மற்றும் திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு நாளை (நவ.06] உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கல் சிங்காரவேலர்…
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று வருகை தந்த போது, துணை…
சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து…