இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையேயான 3-வது டி-20 போட்டியில் 168 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது இந்தியா.
இந்திய அணி:
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என இரு அணிகளும் ஒரு போட்டியில் வென்று சமநிலையில் இருந்தன. இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையேயான மூன்றாவது டி-20 போட்டி இன்று குஜராத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்று இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்து களமிறங்கியது.தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷன், சுப்மான் கில் களமிறங்கினர்.இஷான் கிஷன் 1 ரன்னிற்கு ஆட்டமிழக்க சுப்மான் கில் தனது அதிரடி ஆட்டத்தால் 63 பந்துகளில் 126 ரன்களை குவித்தார் இதில் 7 சிக்ஸர் மற்றும் 12 பவுண்டரிகள் அடங்கும்.
அதன் பின்னர் ராகுல் திரிபாதி தனது பங்கிற்கு 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க , சூர்யகுமார் யாதவ்(24) மற்றும் ஹர்திக் பாண்டியா(30) எடுத்து ஆட்டமிழந்தனர்.இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்களை எடுத்துள்ளது.
நியூசிலாந்து அணி:
இதனை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணி ஆரம்பம் முதலே தடுமாற்றத்தை சந்தித்தது தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஃபின் ஆலன்(3), டெவன் கான்வே(1) ஆட்டமிழந்தனர்.டேரில் மிட்செல் மட்டும் அதிகபட்சமாக 35 ரன்களை எடுக்க மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இறுதியில் நியூசிலாந்து அணி 10 விக்கெட் இழப்பிற்கு 66 ரன்களை மட்டும் எடுத்து தோல்வியை தழுவியது.இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2-1 என்று வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.ஆட்டநாயகனாக சுப்மான் கில் மற்றும் தொடர் நாயகனாக ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்பட்டனர்.
இந்திய அணி: ஷுப்மான் கில், இஷான் கிஷன் (W), ராகுல் திரிபாதி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா (C), தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், சிவம் மாவி, குல்தீப் யாதவ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங்
நியூசிலாந்து அணி: ஃபின் ஆலன், டெவோன் கான்வே (W), மார்க் சாப்மேன், க்ளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர் (C), இஷ் சோதி, லாக்கி பெர்குசன், பென் லிஸ்டர், பிளேயர் டிக்னர்
மும்பை : பாலிவுட் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் சயிப் அலிகான் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம்…
சென்னை : பொங்கல் பண்டிகை விடுமுறையை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடும் பிரபலமான இடங்களில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவும்…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்ததாக…
மதுரை : நீண்ட காலமாக கிடப்பில் உள்ள தூத்துக்குடி - மதுரைக்கு அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் வழியாக புதிய ரயில்வே பாதை…
சென்னை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியில்…
மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக விளையாடவுள்ள இந்திய வீரர்கள் குறித்த விவரத்தை இன்னும் பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.…