2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 116 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி!

அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி 116 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது.

IND VS IRE

ராஜ்கோட்: மகளிருக்கான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அயர்லாந்தை 116 ரன்கள் வித்தியாசத்தில்இந்திய அணி வீழ்த்தியது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 1-0 என்ற கணக்கில்முன்னிலை வகிக்கிறது.

இதையடுத்து, இந்தியா மற்றும் அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று ராஜ்கோட்டில் காலை 11 மணி அளவில் தொடங்கி நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வன்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தொடரை கைப்பற்றும் முனைப்பில் 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 370 ரன்களை குவித்தது.

இதில் தொடக்க வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா (73), பிரதிகா ராவல் (67) வலுவான தொடக்கத்தை கொடுக்க, அடுத்து வந்த ஹர்லீன் தியோல் 89 ரன்கள் குவித்தார். இதன்பின், மிரட்டலாக ஆடிய ஜெமிமா ரொட்ரிகஸ் 102 ரன்கள் விளாசியதால், இந்திய அணியின் ஸ்கோர் 370 ஆக உயர்ந்தது. இப்போட்டியில் இந்திய மொத்தமாக 44 பவுண்டரிகளை விளாசியுள்ளது.

இதையடுத்து 371 ரன்கள் எனும் இமாலய இலக்கை மனதில் வைத்து விளையாடிய அயர்லாந்து அணி, 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 254 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. அயர்லாந்து அணி சார்பாக, அதிகபட்சமாக கூல்டர் ரெய்லி 80 ரன்கள் அடித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்