#INDvENG : 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி! பதிலடி கொடுத்த இந்திய அணி

Default Image
317 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா.
இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் கடந்த 5-ஆம் நடைபெற்றது.இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை பெற்றது .இதனையடுத்து  இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி  கடந்த 13-ஆம் தேதி  சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது.

முதல் நாள் ஆட்டம் :

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்த நிலையில் , இந்திய அணி தனது பேட்டிங்கை தொடங்கியது .தொடக்க வீரர்களாக சுப்மன் கில், ரோகித் சர்மா இருவரும் களமிறங்கினர். இதில் சுப்மன் கில், ஒல்லி ஸ்டோன் பந்துவீச்சில் டக் அவுட்டாகி வெளியேறினார்.
பின்னர், இறங்கிய புஜாரா நிதானமாக விளையாடிய வந்த நிலையில் 28 ரன்னில் வெளியேறினார். அடுத்து இறங்கிய இந்திய அணி கேப்டன் கோலி ரன் எடுக்காமல் டக் -அவுட் ஆனார். 3 விக்கெட்டுகளை இழந்தாலும் மறுபுறம் அதிரடியாக ஹிட் மேன் ரோகித் சர்மா விளையாடி வந்தார் 130 பந்துகளில் தனது 7 வது சதத்தை பதிவு செய்தார் ரோகித்.ஒரு புறம் ரகானே அரை சதம் அடித்தார்.மறுபுறம் ரோகித் 150 ரன்கள் அடித்தார்.சிறிது நேரத்தில் ரோகித் 161 ரன்களில் ஆட்டமிழந்தார்.இவரைத்தொடர்ந்து ரகானே 67 ரன்கள்,அஸ்வின் 13 ரன்களில் ஆட்டமிழந்தார்கள்.முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 88 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 300 ரன்கள் அடித்தது.களத்தில் பண்ட் 33 ரன்களுடனும், அக்சர் 5 ரன்களுடனும் இருந்தனர்.இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் லீச் ,அலி , தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இரண்டாம் நாள் ஆட்டம் :

இரண்டாம் நாள் ஆட்டத்தில் அக்சர் 5 ரன்கள், இஷாந்த் மற்றும் குல்தீப் டக் அவுட், சிராஜ் 4 மட்டுமே எடுத்ததால் இந்திய அணி, 95.5 ஓவர்களில் தனது அனைத்து விக்கெட்டையும் இழந்து 329 ரன்கள் மட்டுமே அடித்தது. களத்தில் பண்ட் 58 ரன்களுடன் இருந்தார். பந்துவீச்சை பொறுத்தளவில் மொயீன் அலி தலா 4 விக்கெட்டுகளையும், ஸ்டோன் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

 

இதனையடுத்து தனது முதல் இன்னிங்க்ஸை இங்கிலாந்து அணி தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோரி பர்ன்ஸ் – டொமினிக் சிப்லி களமிறங்கினார்கள். முதலாம் ஓவரிலே ரோரி பர்ன்ஸ் தனது விக்கெட்டை இழந்தார். பின், 16 ரன்களில் டொமினிக் சிப்லி வெளியேறினார். அவரைதொடர்ந்து களமிறங்கிய ஜோ ரூட், 6 ரன்கள் மட்டுமே அடித்து தனது விக்கெட்டை இழந்தார்.

பின்னர், 9 ரன்களில் லாரன்ஸ் வெளியேற, அதனைதொடர்ந்து 18 ரன்களில் பென் ஸ்டோக்ஸ் வெளியேறினார். 23.2 ஆம் ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்களை இழந்து 52 ரன்கள் மட்டுமே அடித்தது. 22 ரன்கள் எடுத்து ஆலி போப் வெளியேற, அவரைதொடர்ந்து களமிறங்கிய மொயீன்  அலி 6 ரன்களிலும், ஒல்லி ஸ்டோன் 1 ரன் மட்டுமே எடுத்தார்.

இறுதியாக 59.5 ஓவரில் இங்கிலாந்து அணி, தனது அனைத்து விக்கெட்களையும் இழந்து 134 ரன்கள் அடித்தது. இதனால் இந்திய அணி, 195 ரன்கள் முன்னிலையில் இருந்தது. இந்த போட்டியில் அஸ்வின் தலா 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.இதனைதொடர்ந்து இந்திய அணி, தனது பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினார்கள்.இதில் 11 ரன்கள் எடுத்து கில் வெளியேறினார்.இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி, 18 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்தது. களத்தில் 25 ரன்களில் ரோகித் ஷர்மாவும், புஜாரா 7 ரன்களுடனும் இருந்தனர்.

மூன்றாம் நாள் ஆட்டம் :

3-ஆம் நாளான நேற்று இந்திய அணி தனது பேட்டிங்கை தொடங்கியது. போட்டி தொடக்கத்தில் இந்திய அணி சற்று தடுமாறியது. 7 ரன்கள் அடித்து புஜாராவும், 26 ரன்கள் அடித்து ரோகித் சர்மா வெளியேறினார்கள். அதனைதொடர்ந்து களமிறங்கிய பண்ட்  6 ரன்கள் அடித்து வெளியேற, மறுமுனையில் விராட் கோலி சிறப்பாக ஆடிவந்தார். பின்னர் களமிறங்கிய ரகானே, 10 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 62 ரன்கள் அடித்து கோலி வெளியேற, பின்னர் களமிறங்கிய அஸ்வின், நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, சிறப்பாக ஆடிய அஸ்வின் 106 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழந்தார். இறுதியாக இந்திய அணி 85.5 ஓவர்கள் முடிவில் 286 ரன்கள் எடுத்தது. அதனைத்தொடர்ந்து தனது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி, இந்திய அணியில் பந்துவீச்சை தாங்காமல் தடுமாறியது.19 ஓவர்கள்  முடிவில் 3 விக்கெட்களை இழந்து 3-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 53 ரன்கள் எடுத்தது.

நான்காம் நாள் ஆட்டம் :

429 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி இன்று ஆட்டத்தை தொடங்கியது.இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறினார்கள். லாரன்ஸ் 26 ரன்கள்,ஸ்டோக்ஸ் 8 ரன்கள்,போப் 12 ரன்கள்,போக்ஸ் 2 ரன்கள் ,கேப்டன் ரூட் 33 ரன்கள் ,ஸ்டோன் டக் -அவுட் ,மொயீன் அலி 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்கள்.இறுதியில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டையும் இழந்துள்ளது.54.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 164 ரன்கள் மட்டுமே அடித்தது.இதனால் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது.சிறப்பாக பந்துவீசிய அக்சர் படேல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அஸ்வின் 3 விக்கெட்டுகள்,குல்தீப் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள்.4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்