இந்தியா 110 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது…!
ஹாமில்டனில் நடந்த போட்டியில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் 110 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தனது மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது.
இன்றை போட்டியில் முதலில் பேட்டிங் செய்யத் தேர்வு செய்த மிதாலி-ராஜ் ஹாமில்டனில் பங்களாதேஷுக்கு எதிராக யாஸ்திகா பாட்டியா மற்றும் ஷபாலி வர்மா மற்றும் ரிச்சா கோஷ் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 50 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 229 ரன்கள் எடுத்தது. பின்னர் 230 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஷ் அணி 40.3 ஓவரில் 119 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதனால், இந்தியா 113 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி மகளிர் உலகக் கோப்பையில் மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்திலிருந்து மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. பங்களாதேஷ் அணியில் அதிகபட்சமாக சல்மா கதுன் 32 ரன்கள் எடுத்தார். சுழற்பந்து வீச்சாளர் சினேஹ் ராணா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் பங்களாதேஷ் அணியை எளிதில் வீழ்த்த முடிந்தது.