#INDvsBAN: இந்திய அணி அபார வெற்றி…!
ஐசிசி 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை போட்டியில் வங்காளதேச அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா – வங்காளதேச அணிகள் மோதிய போட்டி தென்னாப்பிரிக்காவின் மங்காங் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் இந்திய அணி பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்கள் இழப்பிற்கு 251 ரன்கள்
எடுக்க அந்த அணியின் ஆதர்ஷ் சிங் அதிகபட்சமாக 76 ரன்கள் எடுத்தார்.
ஸ்காட்லாந்து பந்து வீச்சை துவம்சம் செய்து.. இங்கிலாந்து அபார வெற்றி ..!
வங்காளதேசம் சார்பில் மரூப் மிருதா 5 விக்கெட்களை வீழ்த்தினார். இதையடுத்து 252 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்குடன் களமிறங்கிய வங்காளதேசம் அணி ஆரம்பம் முதலே இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. முடிவில் வங்காளதேச அணி 45.5 ஓவர்களில் 167 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து இந்திய அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இப்போட்டியின் ஆட்டநாயகனாக ஆதர்ஷ் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார்.