இந்தியா வெற்றி பெற்றாலும்..! நாங்கள் முழுமையாக தோற்கவில்லை-பவுமா..!
நேற்று முன்தினம் மொஹாலியில் நடைபெற்ற இரண்டாவது டி20-போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இப்போட்டியில் தென்னாபிரிக்கா அணியில் அதிகபட்சமாக பவுமா 49 , டி காக் 52 ரன்கள் குவித்தனர்.
இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு பேசிய பவுமா இந்திய அணி வெற்றி பெற்றாலும் நாங்கள் முழுமையாக தோற்கவில்லை என கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில் 10 முதல் 12 ஒவரை நாங்கள் சிறப்பாக விளையாடினோம்.
நல்ல தொடக்கத்தை நாங்கள் கடைசி வரை எடுத்து செல்லவில்லை. 12 முதல் 15 ஓவர்களில் இடையில் எங்களது விக்கெட்டை இழந்தோம். டேவிட் மில்லர் 13 வது ஓவரில் களமிறங்கும் போது நாங்கள் வலிமையாக இருந்தோம். அப்போது 180 ரன்கள் கூட அடிக்க வாய்ப்பு இருந்தது. ஆனால் அந்த வேகத்தை நானும் , மற்றவர்களும் தவற விட்டோம் என கூறினார்.