நியூஸிலாந்து அணிக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டி20 போட்டியில், 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி நடைபெற்றது. இந்தப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் ரோகித் சர்மா அணியை கேப்டனாக வழி நடத்தினார்.
கே.எல் ராகுல் ,சஞ்சு சாம்சன் இருவரும் இறங்கினர். 4-வது போட்டியை போல இந்த போட்டியிலும் சஞ்சு சாம்சன் ஆட்டம் தொடக்கத்திலே விக்கெட்டை இழந்து வெளியேறினார். சஞ்சு சாம்சன் 2 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.பின்னர் கேப்டன் ரோஹித் சர்மா களமிறங்கினர்.இதையெடுத்து கே.எல் ராகுல் , ரோஹித் சர்மா கூட்டணியில் அணியின் எண்ணிக்கை உயர்ந்தது.அதிரடியாக இருவரும் விளையாடினர். சிறப்பாக விளையாடிய கே.எல் ராகுல் அரைசதம் எட்டாமல் 45 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.
அடுத்த வீரராக ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்கினர்.அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா அரைசதம் விளாசினார்.அடுத்த சிலநிமிடங்களில் ரோஹித் சர்மாவிற்கு ஏற்பட்ட காயம் காரணமாக 60* ரன்னில் வெளியேறினர்.பின்னர் இறங்கிய சிவம் துபே 5 ரன்னில் வெளியேறினார். சிறப்பாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் 33* ரன்கள் அடித்தார்.
அடுத்த வீரராக ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்கினர்.அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா அரைசதம் விளாசினார்.அடுத்த சிலநிமிடங்களில் ரோஹித் சர்மாவிற்கு ஏற்பட்ட காயம் காரணமாக 60* ரன்னில் வெளியேறினர்.பின்னர் இறங்கிய சிவம் துபே 5 ரன்னில் வெளியேறினார். சிறப்பாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் 33* ரன்கள் அடித்தார்.இறுதியாக இந்திய அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் அடித்தது.இந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 60 ரன்கள் ,ராகுல் 45 ரன்கள் அடித்தனர்.
பின்னர் 164 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது.ஆனால் நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வில்லை.கப்தில் 2 ரன்கள் ,முன்ரோ 15 ரன்களிலும் வெளியேறினார்கள்.இதன் பின்பு செய்பெர்ட் நிலைத்து நின்று ஆடி 50 ரன்கள் அடித்து விக்கெட்டை பறிகொடுத்தார்.பின்னர் ராஸ் டெய்லர் தனது பங்கிற்கு 53 ரன்கள் அடித்து வெளியேற ,மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனார்.இதனால் அந்த அணியின் தோல்வி உறுதியானது. இறுதியாக நியூசிலாந்து அணி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 156 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.இந்திய அணியின் பந்துவீச்சில் பூம்ரா 3 விக்கெட்டுகள்,சைனி மற்றும் தாகூர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளனர். இதன் மூலம் இந்திய அணி 5 போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது .5 போட்டிகள் கொண்ட தொடரை 5-0 என்ற கணக்கில் கைப்பற்றி முதல் முறையாக நியூசிலாந்து மண்ணில் தொடரை கைப்பற்றியுள்ளது இந்திய அணி .
சென்னை: இன்று 76-வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.…
சென்னை : வளர்ந்து வரும் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் திலக் வர்மா இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற…
சென்னை : விஜயின் கடைசி திரைப்படமான அவருடைய 69-வது படத்தினை இயக்குனர் எச்.வினோத் இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடித்து முடித்த…
டெல்லி : இன்று 76-வது குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசு தின விழா டெல்லியில், ராஜ்பதில் நடந்தது. குடியரசுத் தலைவர்…
சென்னை : நாட்டிற்காக உயர்நிலையில் சேவையாற்றியவர்களை கவுரவிப்பதற்காக மத்திய அரசால் வழங்கப்படும் மூன்றாவது உயரியவிருதான பத்ம பூஷன் விருது நடிகர் அஜித்துக்கு…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் 76-வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகில் 8…