சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் – வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை வென்ற இந்தியா.!

முதல் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய மாஸ்டர்ஸ் அணி, மே.இ தீவுகள் மாஸ்டர்ஸ் அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றது.

final Masters League T20

சத்தீஸ்கர் : நடந்து முடிந்த சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடர், ஓய்வு பெற்ற கிரிக்கெட் ஜாம்பவான்களை மீண்டும் மைத்தனத்தில் பார்க்க விரும்பிய ரசிகர்களுக்கு ஒரு அற்புதமான விருந்தாக அமைந்தது. இந்தத் தொடரில், இந்திய அணியை பிரபல கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தலைமை தாங்கி வழிநடத்தினார்.

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள வீர நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், சச்சின் தலைமையிலான இந்திய மாஸ்டர்ஸ் அணி, வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணியை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.

இந்தத் தொடரில் இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய ஆறு நாடுகளைச் சேர்ந்த மாஸ்டர்ஸ் அணிகள் பங்கேற்றன. மும்பை, வடோதரா மற்றும் ராய்ப்பூர் ஆகிய நகரங்களில் கடந்த பிப்ரவரி 22ம் தேதி முதல் மார்ச் 16ம் தேதி (நேற்று) வரை இந்தப் போட்டிகள் நடைபெற்றன.

இறுதிப் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணியை எதிர்கொண்ட இந்திய மாஸ்டர்ஸ் அணி, தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, பிரையன் லாரா தலைமையில் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் எடுத்தது.

இந்திய அணியின் பந்துவீச்சில் தவால் குல்கர்னி மற்றும் அபிமன்யு மிதுன் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில், டேரன் மேடி (25 ரன்கள்) மற்றும் டிமோதி அம்ப்ரோஸ் (23 ரன்கள்) ஆகியோர் சிறப்பாக ஆடினாலும், இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியவில்லை.

பின்னர் 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்கை துரத்திய இந்திய மாஸ்டர்ஸ் அணி, சச்சின் டெண்டுல்கரின் அதிரடியான ஆட்டத்தை தொடங்கி சச்சின் 21 பந்துகளில் 34 ரன்கள் (5 பவுண்டரிகள், 1 சிக்ஸர்) எடுத்து விண்டேஜ் டச் கொடுத்தார்.

அவருடன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய குர்கீரத் சிங் மான் 63 ரன்கள் (அரைசதம்) எடுத்து அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார். மேலும், யுவராஜ் சிங் 27 ரன்களுடன் (14 பந்துகள்) அதிரடியாக ஆடி முடித்து வைத்தார். இறுதியாக, இந்திய அணி 11.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 133 ரன்களை எட்டி, ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்