2வது டி20 போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு..!
இந்தியா - இங்கிலாந்து மோதும் 2ஆவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்தியஅணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
சென்னை : இந்தியாவுக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர், 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் டி20 போட்டி ஏற்கனவே கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்து முடிந்துள்ளது.
முதல் டி20 போட்டியில் 20 ஓவரில் 132 ரன்கள் எடுத்திருந்த இங்கிலாந்து அணியை, இந்திய அணி 12.5 ஓவரில் 133 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இருந்தது. அதனை தொடர்ந்து இன்று இரண்டாவது டி20 போட்டி சென்னையில் நடைபெறுகிறது.
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் 2வது டி20 போட்டி இன்று இரவு 7 மணி அளவில் தொடங்கியது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. பந்துவீச்சை தேர்வு செய்த பின் பேசிய கேப்டன் சூர்யகுமார் யாதவ், காயம் காரணமாக நிதிஷ் குமார், ரிங்கு சிங்கு இருவருக்கும் பதிலாக சென்னையை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் விளையாடுகிறார். இதைப் போன்று துருவ் ஜூரல் இன்றைய ஆட்டத்தில் இடம் பிடித்திருப்பதாக தெரிவித்தார்.
முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்ற நிலையில், அதை இந்த போட்டியிலும் தொடர முனைப்பு காட்டி வருகிறது. மேலும், தோல்வியை தழுவிய இங்கிலாந்து அணி இந்த போட்டியில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் பேட்டிங்கில் களமிறங்கியுள்ளது. இந்திய அணி சார்பில் முதலில் அர்ஷ்தீப் சிங் பந்துவீச, இங்கிலாந்து அணி சார்பில்பிலிப் சால்ட் , பென் டக்கெட் ஆகியோர் ஒப்பனராக களமிறங்கியுள்ளனர்.
வீரர்கள் மாற்றம்
காயம் காரணமாக இங்கிலாந்திற்கு எதிரான 2வது மற்றும் 3வது டி20 போட்டியில் இந்திய வீரர் ரிங்கு சிங் விளையாட மாட்டார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. அவருக்கு மாற்றாக ரமன்தீப் சிங் விளையாடுவார். மேலும் பயிற்சியின்போது, காயமடைந்து நிதிஷ் குமார் தொடரில் இருந்து விலகிய நிலையில், அவருக்கு மாற்றாக ஷிவம் தூபே விளையாடவுள்ளார்.
இந்திய அணி:
கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலைமையில், சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் உள்ளனர்.
இங்கிலாந்து அணி:
கேப்டன் ஜோஸ் பட்லர் யாதவ் தலைமையில், பென் டக்கெட், பிலிப் சால்ட், ஹாரி ப்ரூக், லியாம் லிவிங்ஸ்டோன், ஜேமி ஸ்மித், ஜேமி ஓவர்டன், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், மார்க் வூட் ஆகியோர் உள்ளனர்.