இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் அஜின்கிய ரஹானே பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
இன்று இந்தியா – ஆப்கானிஸ்தான் பங்கேற்கும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூரில் தொடங்குகியது. ஆப்கன் அணிக்கு டெஸ்ட் போட்டிக்கான அந்தஸ்தை ஐசிசி அண்மையில் வழங்கியது. இதைத்தொடர்ந்து, அந்த அணி தனது வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்கிறது.
ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடிய ரஷித் கான், முஜித் ரஹ்மான் ஆகியோர் இந்திய அணிக்கு எதிராக களமிறக்கப்பட இருக்கின்றனர். அஜிங்கியா ரஹானே தலைமையிலான இந்திய அணிக்கு ஆப்கானிஸ்தான் சவாலாக விளங்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் அஜின்கிய ரஹானே பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
இந்திய டெஸ்ட் அணி வீரர்கள் விவரம்: அஜின்கிய ரஹானே (கேப்டன்),முரளி விஜய்,ஷிகர் தவான்,புஜாரா,ராகுல்,தினேஷ் கார்த்திக்,ஹர்டிக் பாண்டியா ,அஷ்வின்,ஜடேஜா,இஷாந்த் சர்மா,உமேஷ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் டெஸ்ட் அணி வீரர்கள் விவரம்:ஆஸ்கார் (கேப்டன்),சேசாத்,அஹமடி,ஷாஹிடி,ஷா,அப்சர்,நபி ,ரஷித் கான்,யாமின்,வாபாடர்,முஜீப் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
துபாய் : நடிகர் அஜித்குமார் சினிமாவை தாண்டி ரேஸிங்கில் அதீத ஆர்வம் கொண்டவர். 2000த்தின் தொடக்கத்தில் ரேஸிங்கில் கலந்து கொண்ட…
குஜராத் : நேற்று (ஜனவரி 10) குஜராத் மாநிலம் அகமதாபாத் தனியார் பள்ளியில் எடுக்கப்பட்ட ஒரு சிசிடிவி காட்சிகள் காண்போரை…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
சென்னை : கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம் என…
சென்னை : சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பெஞ்சல் புயல் பாதிப்புக்கு இதுவரை எந்த நிதியும் மத்திய அரசு வழங்கவில்லை என்கிற…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி “நீட் தேர்வை…