#INDvsNZ: சூப்பர் ஒவரில் திரில் வெற்றி ! தொடரை வென்றது இந்தியா

Published by
murugan

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று 3-வது டி-20 போட்டி நடைபெற்றது.விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் நியூசிலாந்து அணி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட  180 ரன்களில் 179 ரன்கள் மட்டுமே அடித்ததால் ஆட்டம் சமனில் முடிய,சூப்பர் ஓவரில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது.   

இந்தியா , நியூசிலாந்து அணிகள் 3-வது டி -20  போட்டி ஹாமில்டனில் உள்ள செடான் பார்க் மைதானத்தில்விளையாடியது.இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் தனது பேட்டிங்கை தொடங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் மற்றும் ராகுல் ஆகியோர் களமிறங்கினர்.இவர்களின்   சிறப்பான தொடக்கத்தால் இந்திய அணியின் எண்ணிக்கை சற்று உயர்ந்தது. அப்போது  ராகுல் 27 ரன்களில் வெளியேறி , அடுத்தபடியாக  இறங்கிய சிவம் துபே 3 ரன்களில் வந்த வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

மறுமுனையில் ரோகித் தனது அதிரடி ஆட்டத்தால் 20-வது அரை சதத்தை நிறைவு செய்தார். பின்பு ரோகித் 65 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் இறங்கிய கோலி தனது பங்கிற்கு 38 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 17 ரன்களும் அடித்தனர். இறுதியாக இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 179 ரன்கள் அடித்துள்ளது. களத்தில் ஜடேஜா 10*,பாண்டே 14* ரன்களுடனும்  இருந்தனர். நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் பெனட்  3  விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 180  ரன்கள் அடித்தால் வெற்றி  என்ற இலக்குடன் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக மார்ட்டின் குப்டில் , கொலின் மன்ரோ இருவரும் இறங்கினர். தொடக்கத்திலே அதிரடியாக விளையாடிய மார்ட்டின் 31 ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர் கேப்டன் கேன் வில்லியம்சம் களமிறங்கினார். வில்லியம்சம் இறங்கிய சில நிமிடங்களில் கொலின் மன்ரோ 14 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.

இதையெடுத்து கேப்டன் கேன் வில்லியம்சம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தார்.பின்னர் இறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேற கேன் வில்லியம்சம் கடைசிவரை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 95 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.

இறுதியாக நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 179 ரன்கள் அடித்தனர்.இதனால் போட்டி சமனில் முடிந்தது.எனவே சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது.இதன் படி முதலில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.இதில் ஒரு ஒவரில் நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி  17 ரன்கள் அடித்தது.வில்லியம்சன் 12*ரன்கள்,குப்தில் 5* ரன்களும் அடித்தனர்.இதனையடுத்து 18 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.இந்திய அணி 1 ஒவரில் 20 ரன்கள் அடித்து வெற்றிபெற்றது.களத்தில் ரோகித் 15 * ,ராகுல் 5 ரன்களுடனும் இருந்தனர்.இதனால் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி -20  தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

Published by
murugan

Recent Posts

என்னதான் ஆச்சு? மீண்டும் சொதப்பிய ரோஹித் சர்மா..டென்ஷனில் ரசிகர்கள்!

என்னதான் ஆச்சு? மீண்டும் சொதப்பிய ரோஹித் சர்மா..டென்ஷனில் ரசிகர்கள்!

மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…

1 hour ago

MIvsRCB : படிதார், கோலி அதிரடி! மும்பைக்கு இது தான் இலக்கு!

மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…

2 hours ago

புகழ்ந்து பேசிய அண்ணாமலை..மேடையில் வைத்தே பதிலடி கொடுத்த சீமான்!

சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…

3 hours ago

MIvRCB : அணிக்கு திரும்பிய நம்பிக்கை நட்சத்திரம் பும்ரா…டாஸ் வென்று மும்பை பந்துவீச்சு தேர்வு!

மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…

4 hours ago

“சீமான் அண்ணன், போர்க்களத்தில் இருக்கும் ஒரு தளபதி!” அண்ணாமலை புகழாரம்!

சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…

5 hours ago

அதிமுக தொண்டர்களுக்கு எடப்பாடி துரோகிதான்…அமைச்சர் ரகுபதி பதிலடி!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ‘ யார் அந்த தியாகி?’…

5 hours ago