பயிற்சி ஆட்டம் : இந்தியா 95 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

Published by
kavitha

2019 உலககோப்பை போட்டியானது இங்கிலாந்தில் 30 தேதி துவங்குகிறது. இதில் பங்கேற்க 10 அணிகள் இங்கிலாந்து சென்றுள்ளது.தற்போது அணிகளுக்கு எல்லாம் பயிற்சி ஆட்டம் நடைபெற்று வருகிறது.

இந்தியா தனது உலககோப்பைக்கான முதல் பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்தை எதிர்கொண்டது.ஆனால் அந்த ஆட்டத்தில் தோல்வியை தழுவியது. இந்திய பேட்ஸ்மேன்களின் சொதப்பல் தான் தோல்விக்கு காரணம் என்று கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியில் விமர்சனங்கள் கடுமையாக எழுந்தது.

இந்நிலையில் இந்தியா தனது 2 வது பயிற்சி ஆட்டத்தில் வங்களா தேசத்தை எதிர்கொண்டது.இதில் டாஸ் வென்ற வங்க தேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது.இதனால் இந்தியா பேட்டிங்கில் களமிறங்கியது.களமிறங்கிய தொடக்க இந்திய வீரர்கள் அவுட் ஆகி அதிர்ச்சி அளிக்க இந்தியா 102 ரன் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.அதன்படி தவான் 1 ரன்னிலும் ,ரோகித் சர்மா 19 ரன்னிலும் கேப்டன்  விராட் கோலி 47 ரன்னிலும், விஜய் சங்கர் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

5 வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கே.எல் ராகுல் மற்றும் தோனி ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது.மேலும் இருவரின் அதிரடி ஆட்டத்தால் அணியின் ஸ்கோர் கிடுகிடுவென உயர்ந்தது.மேலும் இருவரும் சதம் விளாசி ரசிகர்களுக்கு சதத்தை விருந்தாக படைத்தனர்.

அதன்படி கே.எல் ராகுல் 99 பந்துகளை எதிர்கொண்டு 12 பவுண்டரிகள் மற்றும்  4 சிக்சருடன் 108 ரன்களை குவித்து ஆட்டமிழக்க மறுபக்கத்தில் தோனி  78 பந்துகளை எதிர்கொண்டு  8 பவுண்டரிகள் மற்றும்  7 சிக்சருடன் 113 ரன்களை குவித்து வெளியேறினார்.   இதனால் இந்தியா 50 ஓவர் முடிவில் 359 ரன்களை குவித்தது. வங்காள தேசத்திற்கு 360 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

இதன் பின் களமிறங்கிய வங்க தேசம் சீரான ஆட்டத்தில் அந்த அணி பேட்ஸ்மேன்க்ளின் விக்கெட்டை இந்தியா வீழ்த்தியது.அதனால் அந்த அணி 50 ஒவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.இதனால் 264 ரன்கள் எடுத்து.தோல்வி அடைந்தது.

இந்திய அணி சார்பாக குல்தீப் யாதவ் மற்றும்  சாஹல் தலா 3 விக்கெட்டுகளையும், பும்ரா தன் பங்கிற்கு  2 விக்கெட்டுகளையும், ஜடேஜா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்கள். இதன் மூலமாக வங்கதேச அணிக்கு எதிரான இந்த போட்டியில் இந்தியா  95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

Recent Posts

திருப்பதி கூட்ட நெரிசல்: தமிழகத்தை சேர்ந்த ஒருவர்… உயிரிழந்தவர்களின் விவரங்கள் வெளியீடு.!

திருப்பதி கூட்ட நெரிசல்: தமிழகத்தை சேர்ந்த ஒருவர்… உயிரிழந்தவர்களின் விவரங்கள் வெளியீடு.!

ஆந்திரப் பிரதேசம்:  ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி 10 முதல் 19 வரை சொர்க்கவாசல் திறந்திருப்பதால் இலவச டிக்கெட்…

5 minutes ago

பொங்கல் பரிசுத் தொகுப்பு : திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டு தோறும் அரசு சார்பில் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுவது என்பது வழக்கம். இந்த ஆண்டு  (9ஆம்…

43 minutes ago

Live : சட்டபேரைவை கூட்டத்தொடர் முதல்..திருப்பதி கூட்ட நெரிசல் வரை!

சென்னை : இந்த ஆண்டிற்கான முதல் தமிழ்நாட்டின் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை (ஜன. 6) தொடங்கிய நிலையில், 4-வது நாள்…

1 hour ago

என்னது கோவாவில் பயணிகள் எண்ணிக்கை குறைந்துவிட்டதா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த புள்ளி விவரம்!

கோவா : கடந்த சில வாரங்களாக சமூக ஊடகங்களில் "கோவா செல்லும் பயணிகள் எண்ணிக்கை குறைந்துவிட்டது" என்று பரபரப்பட்டு வரும்…

1 hour ago

தெற்கு கலிஃபோர்னியாவில் கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத் தீ! 5 பேர் பலி!

அமெரிக்கா : லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் ஏற்பட்ட தீவிபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ள மற்றும் 1,100க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் நொறுங்கின…

2 hours ago

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித் மார்டின் கப்டில்! முக்கிய பொறுப்பு கொடுக்கும் நிர்வாகம்?

நியூசிலாந்து : அணியின் தொடக்க வீரர் மார்டின் கப்டில் தனது 14 வருட சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக…

3 hours ago