பயிற்சி ஆட்டம் : இந்தியா 95 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி
2019 உலககோப்பை போட்டியானது இங்கிலாந்தில் 30 தேதி துவங்குகிறது. இதில் பங்கேற்க 10 அணிகள் இங்கிலாந்து சென்றுள்ளது.தற்போது அணிகளுக்கு எல்லாம் பயிற்சி ஆட்டம் நடைபெற்று வருகிறது.
இந்தியா தனது உலககோப்பைக்கான முதல் பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்தை எதிர்கொண்டது.ஆனால் அந்த ஆட்டத்தில் தோல்வியை தழுவியது. இந்திய பேட்ஸ்மேன்களின் சொதப்பல் தான் தோல்விக்கு காரணம் என்று கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியில் விமர்சனங்கள் கடுமையாக எழுந்தது.
இந்நிலையில் இந்தியா தனது 2 வது பயிற்சி ஆட்டத்தில் வங்களா தேசத்தை எதிர்கொண்டது.இதில் டாஸ் வென்ற வங்க தேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது.இதனால் இந்தியா பேட்டிங்கில் களமிறங்கியது.களமிறங்கிய தொடக்க இந்திய வீரர்கள் அவுட் ஆகி அதிர்ச்சி அளிக்க இந்தியா 102 ரன் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.அதன்படி தவான் 1 ரன்னிலும் ,ரோகித் சர்மா 19 ரன்னிலும் கேப்டன் விராட் கோலி 47 ரன்னிலும், விஜய் சங்கர் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
5 வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கே.எல் ராகுல் மற்றும் தோனி ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது.மேலும் இருவரின் அதிரடி ஆட்டத்தால் அணியின் ஸ்கோர் கிடுகிடுவென உயர்ந்தது.மேலும் இருவரும் சதம் விளாசி ரசிகர்களுக்கு சதத்தை விருந்தாக படைத்தனர்.
அதன்படி கே.எல் ராகுல் 99 பந்துகளை எதிர்கொண்டு 12 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சருடன் 108 ரன்களை குவித்து ஆட்டமிழக்க மறுபக்கத்தில் தோனி 78 பந்துகளை எதிர்கொண்டு 8 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்சருடன் 113 ரன்களை குவித்து வெளியேறினார். இதனால் இந்தியா 50 ஓவர் முடிவில் 359 ரன்களை குவித்தது. வங்காள தேசத்திற்கு 360 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
இதன் பின் களமிறங்கிய வங்க தேசம் சீரான ஆட்டத்தில் அந்த அணி பேட்ஸ்மேன்க்ளின் விக்கெட்டை இந்தியா வீழ்த்தியது.அதனால் அந்த அணி 50 ஒவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.இதனால் 264 ரன்கள் எடுத்து.தோல்வி அடைந்தது.
இந்திய அணி சார்பாக குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் தலா 3 விக்கெட்டுகளையும், பும்ரா தன் பங்கிற்கு 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்கள். இதன் மூலமாக வங்கதேச அணிக்கு எதிரான இந்த போட்டியில் இந்தியா 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.