“முதல் டெஸ்ட் போட்டியை இந்தியா வெற்றி பெறாது”! ரசிகர்கள் கூறும் புள்ளிவிவரம் என்ன?
நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சரிவை கண்டு தற்போது நிதானமாக விளையாடி வருகிறது.
சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி வெற்றி பெற வாய்ப்பு குறைவு என ரசிகர்கள் இணையத்தில் சில புள்ளிவிவரங்களை வைத்து கூறி வருகின்றனர். இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியானது சேப்பாக்கத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் டாஸ் வென்று வங்கதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்ததால் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. போட்டியின் தொடக்கத்தில் முக்கிய 3 வீரர்களான ரோஹித், கில் மற்றும் கோலி ஆகிய வீரர்களை அடுத்தடுத்து இந்திய அணி இழந்தது.
இதனால், இந்தியா அணி பேட்டிங்கில் தடுமாறியது. அதன்பிறகு ஜெய்ஸ்வாலும், பண்டும் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால், இந்திய அணி சரிவிலிருந்து மீண்டு வந்துள்ளது. பண்ட்-ஜெய்ஸ்வால் கூட்டணியில் மட்டும் இந்திய அணி 62 ரன்களை சேர்த்தது.
இந்த நிலையில், 97 ரன்கள் இந்திய அணி எடுத்திருந்த நிலையில் நிலைத்து விளையாடி கொண்டிருந்த ரிஷப் பண்ட் 39 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பிறகு கே.எல்.ராகுல், ஜெய்ஸ்வாலுடன் இணைந்து விளையாடி வருகிறார். இப்படி இருக்கையில் இந்த போட்டியில் டாஸ் போடப்படத்திலிருந்து இந்திய அணி இந்த போட்டியை வெற்றி பெற மாட்டார்கள் என ஒரு புள்ளிவிவரத்தை வைத்து ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
அது என்னவென்றால் இந்திய அணி இதுவரை டெஸ்ட் போட்டிகளில் டாஸ் தோல்வியடைந்து முதலில் பேட்டிங் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்ட போதெல்லாம் இந்திய அணி அந்த போட்டிகளில் கஷ்டப்பட்டிருக்கிறது, குறிப்பாக குறைவாகவே போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
அதாவது இந்திய அணி இது போன்ற சூழ்நிலையில் (எதிராணியால் முதலில் இந்திய பேட்டிங் செய்ய வேண்டிய சூழல் ) கடந்த 8 போட்டிகளின் புள்ளிவிவரங்களை பார்க்கும் போது அதில் 2போட்டிகளில் மட்டுமே இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
மேலும், மீதமுள்ள 6 போட்டியும் இந்திய அணி ட்ரா ஆகியுள்ளது. எனவே டெஸ்ட் போட்டியில் எதிராணியால் முதலில் பேட்டிங் ஆட சொன்னால் இந்தியாவுக்கு அது ராசி இல்லாமல் இருக்கிறது எனவும் அதனால் இந்த போட்டியை இந்திய அணி ட்ரா செய்வதற்கே வாய்ப்பு அதிகம் எனவும் ரசிகர்கள் கூறுகிறார்கள்.
ஆனால் ஒரு தரப்பு ரசிகர்கள், “இது போல புள்ளிவிவரங்கள் எல்லாம் எந்த ஒரு போட்டியின் முடிவையும் பாதிக்காது. சிறப்பாக விளையாடும் அணி கண்டிப்பாக வெற்றி பெறுவார்கள் அது இந்திய அணி ஆனாலும் சரி வங்கதேச அணி ஆனாலும் “, என கூறிவருகிறார்கள். தற்போது நடைபெற்று வரும் இந்த போட்டியானது வங்கதேச அணியின் பக்கமே கை ஓங்கி காண்டப்பட்டு வருகிறது.
கடந்த 8 போட்டிகளின் புள்ளிவிவரம் :
- 2017 – இலங்கை அணியுடன் போட்டி ட்ரா
- 2001 – ஆஸ்திரேலியா அணியுடன் இந்தியா வெற்றி பெற்றது
- 1999 – நியூசிலாந்து அணியுடன் போட்டி ட்ரா
- 1997 – இலங்கை அணியுடன் போட்டி ட்ரா
- 1987 – பாகிஸ்தான் அணியுடன் போட்டி ட்ரா
- 1982 – இங்கிலாந்து அணியுடன் போட்டி ட்ரா
- 1978 – வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் போட்டி ட்ரா
- 1969 – ஆஸ்திரேலியா அணியுடன் இந்தியா வெற்றி பெற்றது