3-வது வெற்றியைப் பதிக்குமா இந்தியா.? இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் மோதல்.!
IND vs AUS: இந்தியா உள்ள பல இடங்களில் கடந்த அக்டோபர் 5ம் தேதி முதல் தொடங்கிய நடைபெற்று வரும், 2023 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைத் தொடர் ஆனது இறுதிப்போட்டியை எட்டியுள்ளது. அதன்படி, முதலாவதாக நடந்த அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்தை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
மறுபுறம் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி, இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்காவை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. இதனால் இறுதிப்போட்டியில் 2 முறை சாம்பியன் ஆன இந்திய அணி, தனது மூன்றாவது கோப்பைக்காக ஐந்து முறை சாம்பியன் ஆன ஆஸ்திரேலிய அணியுடன் மோதவுள்ளது.
உலகக்கோப்பை இறுதிப்போட்டி..ரசிகர்களுக்கு சர்பிரைஸ் தரும் இந்திய விமானப்படை.!
கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்புகள் கொண்ட இந்த போட்டியானது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில், வரும் 19ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 2 மணியளவில் நடைபெறுகிறது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் நேருக்கு நேர் மோதுகின்றன. இரு அணிகளும் கடைசியாக 2003 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் மோதியது.
ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிகளில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இதுவரை 13 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 8 போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற நிலையில், 5 போட்டிகளில் மட்டுமே இந்தியா வெற்றி பெற்றது. அதேபோல, இந்த இரண்டு அணிகளும் 150 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது.
இதில் ஆஸ்திரேலியா 83 போட்டிகளிலும், இந்தியா 57 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. 10 போட்டிகள் முடிவுகள் இல்லாமல் உள்ளது. நடப்புத் தொடரில் கூட இந்தியா தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. அந்தப் போட்டியில் இந்தியா 201 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எனவே இந்த இறுதிப் போட்டியிலும் இந்திய அணியே வெல்லும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
கிரிக்கெட் ரசிகராக மாறிய பிரதமர் மோடி… உலகக்கோப்பை இறுதிப்போட்டியை காண நான் ரெடி.!
மேலும், இத்தொடரில் இந்தியா விளையாடிய 9 லீக் போட்டி மற்றும் இரு அரையிறுதிப் போட்டியிலும் பேட்டிங் மற்றும் பௌலிங் என அனைத்து நிலைகளிலும் சிறப்பாக விளையாடியது. இதனால் ஒரு போட்டியில் கூட இந்திய அணித் தோவியை சந்திக்கவில்லை. எனவே 2023 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியிலும் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
இந்த இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லும். இந்தியா இரண்டு முறை ஒருநாள் உலகக் கோப்பையை வென்றுள்ளது. 1983-ம் ஆண்டு இறுதிப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தியதே முதல் வெற்றியைப் பதித்தது. 2011 இல் இலங்கையை இறுதிப்போட்டியில் தோற்கடித்த இந்தியா இரண்டாவது முறையாக சாம்பியன் ஆனது.
இதேபோல, ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றால் 6-வது முறையாக ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை சாம்பியன் பட்டம் வெல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.