இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் போட்டி தொடர் இன்று தொடக்கம்.!

IND WI ODi

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதல் ஒருநாள் போட்டி இன்று, பார்படாசில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் தொடக்கம்.

வெஸ்ட் இண்டிஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடரை 1-0 என வென்றுள்ள இந்திய அணி, அடுத்ததாக மோதும் ஒருநாள் போட்டித்தொடர் இன்று பார்படாசின் கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது.

ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெறும் வாய்ப்பை, சமீபத்தில் நடந்து முடிந்த தகுதிச்சுற்று தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி இழந்தது குறிப்பிடத்தக்கது. ஷாய் ஹோப் தலைமையில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், ஷிம்ரன் ஹெட்மயர் மீண்டும் ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுவரை இவ்விரு அணிகளும் 139 போட்டிகளில் நேருக்குநேர் மோதியதில், இந்திய அணியே 70 போட்டிகளில் வென்று ஆதிக்கம் செலுத்துகிறது. இந்திய அணியைப் பொறுத்தவரை இளம் வீரர்களுக்கு இத்தொடரில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இரு அணிகளின் விவரம்,

இந்தியா:

ரோஹித் சர்மா(C), சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன்(W), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், உம்ரான் மாலிக், யுஸ்வேந்திர சாஹல், முகமது சிராஜ், ஜெய்தேவ் உனத்கட், முகேஷ் குமார், ஷர்துல் தாகூர், அக்சர் பட்கூர் , இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட்

வெஸ்ட் இண்டீஸ்:

ஷாய் ஹோப்(W/C), கைல் மேயர்ஸ், பிராண்டன் கிங், ஷிம்ரோன் ஹெட்மியர், அலிக் அதானாஸ், ரோவ்மன் பவல், கீசி கார்டி, ரொமாரியோ ஷெப்பர்ட், குடாகேஷ் மோட்டி, அல்ஸாரி ஜோசப், ஓஷேன் தாமஸ், ஜெய்டன் சீல்ஸ், கெவின் சின்க்ளேர், டொமினிக் டிரேக்ஸ், யானிக் கரியா

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்