இன்று ஆசிய கோப்பையில் இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் திருவிழாவில், மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் துபாயில் நேற்று முன்தினம் ‘ஏ’ பிரிவு கடைசி லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் விளையாடியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.
பாகிஸ்தான் 43.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது, 162 ரன்களில் சுருண்டது. இதனால் இந்தியாவிற்கு 163 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்திய அணியின் பந்துவீச்சில் புவனேஷ் குமாரும், கேதர் ஜாதவும் தலா மூன்று விக்கெட்களை எடுத்தனர். பும்ரா இரண்டு விக்கெட்களை எடுத்தார். குல்தீப் யாதவ் ஒரு விக்கெட்டை எடுத்தார்.
இதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணி 29 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது.இந்திய அணியின் பேட்டிங்கில் அதிகபட்சமாக ரோகித் 52 மற்றும் தவான் 46 ரன்கள் அடித்தனர். களத்தில் தினேஷ் 31,ராயுடு 31 ரன்களுடன் இருந்தனர்.இந்த போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இன்று ஆசிய கோப்பையில் சூப்பர்-4 சுற்று தொடங்குகிறது. இந்த சுற்றுக்கு வந்துள்ள 4 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இன்று 2 போட்டிகள் நடக்கின்றன. துபாயில் நடக்கும் ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றது.அதேபோல் மற்றொரு ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஷ்தான் அணிகள் மோதுகின்றது.
இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான போட்டியை பொறுத்தவரை இந்திய அணி ஹாங்காங் அணியுடன் சறுக்கி இருந்தாலும் பாகிஸ்தான் அணியுடன் சிறப்பாக விளையாடி உள்ளது.அதேபோல் வங்கதேசம் இலங்கை அணியுடன் அபாரமாக விளையாடி வெற்றி பெற்றுள்ளது.ஆனால் நேற்று ஆப்கானிஸ்தான் அணியுடன் படுதோல்வி அடைந்துள்ளது.சமீபகாலமாக வங்கதேச அணியின் ஆட்டம் அபாரமாக உள்ளது.இந்நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் இந்தியாவுடன் எப்படி விளையாடப்போகிறது என்பதை பொறுத்து இருந்தான் பார்க்க வேண்டும் .
இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய இரு அணிகளும் இதுவரை 33 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி , 27 போட்டிகளில் இந்தியாவும், 5-ல் வங்கதேசமும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.
முன்னதாக இலங்கை தொடரில் பாம்பு நடனம் ஆடிய வங்கதேச வீரர்களை நினைவில் வைத்து ’இன்னைக்கு பாம்பு நடனம் உண்டா பாஸ்?’ என்று சமூக வலைத்தளங்களில் அதிகம் கேள்விகள் கேட்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி வரை…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, எந்த…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. சமீபத்தில் கடலூர்…
காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…