மேற்கு இந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இன்று இரண்டாவது டி-20 போட்டி நடைபெறுகிறது.கேரளாவில் மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன் பீல்டு மைதானத்தில் ( Greenfield Stadium) நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணியின் கேப்டன் பொல்லார்ட் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதை தொடர்ந்து இந்திய அணி முதலில் களமிறங்கியது.இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 170 ரன்கள் எடுத்தது.சிறப்பாக விளையாடிய சிவம் துபே 54 ரன்கள் குவித்தார்.வெஸ்ட் இண்டீஸ் அணியில் கெஸ்ரிக் வில்லியம்ஸ் ,ஹேடன் வால்ஷ் ஆகிய இருவரும் தலா இரண்டு விக்கெட்டை வீழ்த்தினார்.171 ரன்கள் இலக்குடன் மேற்கு இந்திய தீவுகள் அணி களமிறங்கியது. மேற்கு இந்திய தீவுகள் அணியில் இறங்கியவர்கள் தங்களது பங்கிற்கு அதிரடி காட்டினார்கள். லீவிஸ் 40 ரன்கள் ,ஹெட்மேயர் 23 ரன்களில் வெளியேற சிம்மன்ஸ் மற்றும் பூரான் ஜோடி வெற்றியை உறுதி செய்தது.18. 3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் அடித்து வெற்றிபெற்றது.களத்தில் சிம்மன்ஸ் 67* மற்றும் பூரான் 38* ரன்களுடன் இருந்தனர்.8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இந்தியாவுக்கு எதிரான 2வது டி-20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது மேற்கிந்திய தீவுகள் அணி.
பெங்களூர் : விராட் கோலி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பல சாதனைகளைப் படைத்துள்ளார். இப்போது விராட் ஐபிஎல்லில் தனது பெயரில்…
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று (ஏப்.11)…
சென்னை : 2 நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா நேற்றிரவு 11:30…
சென்னை : 2026 சட்டப்பேரவை தேர்தலை கவனத்தில் கொண்டு தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் செயல்பட்டு வருகிறார்.…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், டெல்லி அணியும் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மோதுகிறது. இந்த…
சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அஜித்…